தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட விலக்கு அளிக்க கோரி வழக்கறிஞர்கள் சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை! - ADVOCATE STICKERS in vehicles - ADVOCATE STICKERS IN VEHICLES

Lawyers vehicles sticker: வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட விதிக்கப்பட்ட தடையில் இருந்து வழக்கறிஞர்களுக்கு விலக்கு அளிக்க சென்னை போக்குவரத்து போலீசாருக்கு உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

வழக்கறிஞர்கள் சங்கம்
lawyers vehicles sticker

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 29, 2024, 4:15 PM IST

சென்னை: சட்டரீதியான அங்கீகாரம் பெற்ற வழக்கறிஞர்களின் சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கறிஞர்கள் ஸ்டிக்கர்களை தொடர்ந்து பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

"தனியார் வாகனங்களில் அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர்களை கட்டுப்படுத்துதல்" என்ற தலைப்பில், சொந்த வாகனங்களில் ஊடகம், காவல்துறை, நீதித்துறை, வழக்கறிஞர் என ஸ்டிக்கர் ஒட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மோட்டார் வாகனச் சட்டம் பிரிவு 198 மற்றும் மத்திய மோட்டார் வாகன விதி 50 ஆகியவற்றின் கீழ், 2024 மே 02ஆம் தேதி முதல் வழக்குப் பதிவு செய்யப்படும் என சென்னை போக்குவரத்து போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால், வழக்கறிஞர்கள் சட்டம் 1961 இன் கீழ், சட்ட பூர்வ அமைப்பான தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் பார் கவுன்சில், பதிவு செய்யப்பட்ட வழக்கறிஞர்களின் RC புத்தகங்கள் மற்றும் பதிவுச் சான்றிதழ்களைச் சரிபார்த்து பிறகு வாகன ஸ்டிக்கர்களை வெளியிடுகிறது.

வழக்கறிஞர் சங்கத்தால் சரிபார்ப்புக்கு பிறகு வழக்கப்படும் ஸ்டிக்கர்கள், நீதிமன்ற வளாகங்களில் தடையின்றி நுழைவதற்கும், பார்க்கிங் செய்வதற்கும், போக்குவரத்து விதிகளில் இருந்து விலக்கு பெறுவதற்காக மட்டுமல்லாமல் வக்கீல் அல்லாதவர்கள் தவறாக பயன்படுத்துவதை தடுக்கவும் கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில், வழக்கறிஞர்களின் ஸ்டிக்கர்களை அகற்ற வேண்டும் என்பது சட்ட விதிகளுக்கு எதிரானது. மோட்டார் வாகனச் சட்டத்தின் பிரிவு 198, வாகனத்தைச் சேதப்படுத்துவதைத் தடுக்க மட்டுமே அதிகாரம் உள்ளது. மத்திய மோட்டார் வாகன விதிகளின் 50வது விதி, குறைபாடுள்ள நம்பர் பிளேட்டுகளை தடுக்க உதவுகிறது.

எனவே, ஸ்டிக்கர்கள் ஒட்டுவதைத் தடுக்க முடியாது. அதனால் சட்டரீதியாக, முறையாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கறிஞர்களின் வாகனங்களில் உள்ள வக்கீல்கள் ஸ்டிக்கர்களை அகற்ற வேண்டும் என்ற அரசின் அறிவிப்பைத் திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது.

இதையும் படிங்க:தக்காளி சாஸில் நெழிந்த புழுக்கள்.. நடிகர் விஜய் விஷ்வா ஆவேசம் - வீடியோ வைரல் - Actor Vijay Vishwa

ABOUT THE AUTHOR

...view details