சென்னை:கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் தொடர்பான வழக்கின் விசாரணையை சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வு குழுவுக்கு மாற்றக் கோரி, அதிமுக வழக்கறிஞர்கள் அணி மாநிலச் செயலாளர் இன்பதுரை மற்றும் பாமக செய்தித் தொடர்பாளரும், சமூக நீதிப்பேரவை தலைவருமான வழக்கறிஞர் பாலு ஆகியோர் தாக்கல் செய்திருந்த வழக்குகள், சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபீக் அமர்வில் இன்று (ஜூன் 26) மீண்டும் விசாரணைக்கு வந்தன.
அப்போது, தமிழக அரசுத்தரப்பில் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், அரசின் அறிக்கை தயாராக உள்ளது. அதை தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் வழங்கவேண்டும். அதனால், வழக்கின் விசாரணையை 10 நாட்களுக்கு தள்ளிவைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
ஆனால், வழக்கில் உடனடியாக புலன் விசாரணையை நடத்த வேண்டும். புலன் விசாரணையை உரிய நேரத்தில் துவங்காவிட்டால் ஆதாரங்கள் அழிந்து விசாரணையில் பாதிப்பு ஏற்படும். விசாரணை வீணாகி விடும் என பாலு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகவாச்சாரி தெரிவித்தார்.