சென்னை :தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சரும், எம்.ஜி.ஆரின் மனைவியுமான மறைந்த ஜானகி அம்மாளின் நூற்றாண்டு விழா சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் மண்டபத்தில் நடைபெற்றது. அதிமுக சார்பில் நடைபெற்ற இந்த விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் நூற்றாண்டு விழா மலரை வெளியிட்டு, ஜானகியுடன் பயணித்தவர்களுக்கு நினைவுப் பரிசுகளையும் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். ஜானகியின் வாழ்க்கை தொடர்பான குறும்படம், கவியரங்கம், கிராமிய இசை நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் காணொளி வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்.
மேலும், இவ்விழாவில் ஏஐ தொழில்நுட்பம் மூலமாக எம்.ஜி.ஆர் பேசும் காட்சிகள் சித்தரிக்கப்பட்டிருந்தன. அதில், "வணக்கம். எல்லோரும் நல்லா இருக்கீங்களா. நான் இப்போதும் உங்களுடன் தான் இருக்கிறேன். உங்கள் இதயத்தில் தான் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறேன். எனது மனைவி ஜானகி அதிமுகவிற்கு மிகப்பெரிய பங்களிப்பை அளித்துள்ளார் என்பது நீங்கள் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.
இதையும் படிங்க :"அரசியல் சரிபட்டு வராது என துணிந்து முடிவெடுத்தவர் ஜானகி ராமச்சந்திரன்" - நூற்றாண்டு விழாவில் ரஜினி புகழாரம்!