தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்.. வானிலை ஆய்வு மையம் தகவல்! - Temperature Increase In TN

TN Weather update: இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வெயில் கோப்புப்படம்
வெயில் கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 28, 2024, 4:05 PM IST

சென்னை: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி) 5 செ.மீ மழையும், சுருளக்கோடு, திற்பரப்பு , பாலமோர், புத்தன் அணை, முள்ளங்கினாவிளை, களியல் (கன்னியாகுமரி) 4 செ.மீ மழையும், சிற்றாறு-I, குழித்துறை , தக்கலை, கோழிப்போர்விளை (கன்னியாகுமரி) 3 செ.மீ மழையும், சிவலோகம் (சித்தர் II), நாகர்கோயில் AWS, நாகர்கோயில் (கன்னியாகுமரி) 2 செ.மீ மழையும், அடையாமடை, அணைகெடங்கு, குருந்தன்கோடு, இரணியல், மாம்பழத்துறையாறு (கன்னியாகுமரி), நாலுமுக்கு (திருநெல்வேலி), கன்னிமார் (கன்னியாகுமரி), திருப்பதிசாரம் AWS (கன்னியாகுமரி) 1 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை :அதிகபட்ச வெப்பநிலை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் பொதுவாக இயல்பை ஒட்டியும், இயல்பை விட சற்று அதிகமாகவும் இருந்தது. அதிகபட்ச வெப்பநிலை சென்னை மீனம்பாக்கத்தில் மற்றும் நுங்கம்பாக்கத்தில் 40.6 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 32 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 38 டிகிரி மற்றும் 37 டிகிரி செல்சியஸ் மற்றும் மலைப் பகுதிகளில் 24 டிகிரி முதல் 25 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை சென்னை மீனம்பாக்கத்தில் 40.6 டிகிரி செல்சியஸ் (+1.7 டிகிரி செல்சியஸ்) மற்றும் நுங்கம்பாக்கத்தில் 40.6 டிகிரி செல்சியஸ் (+2.6 டிகிரி செல்சியஸ்) பதிவாகியுள்ளது.

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை:தென்தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்மேற்கு பருவமழை கேரளா பகுதிகளில் அடுத்த 3 அல்லது 4 தினங்களில் துவங்கக்கூடும். இன்று முதல் மே 30 வரையில், தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மே 31 மற்றும் ஜூன் 1 ஆம் தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஜீன் 2, 3 ஆம் தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:இன்று முதல் மே 30 வரை அடுத்த 3 தினங்களுக்கு, அதிகபட்ச வெப்பநிலை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக 2-3 டிகிரி செல்சியஸ் படிப்படியாக உயரக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். மே 31 மற்றும் ஜூன் 1 ஆம் தேதி, அதிகபட்ச வெப்பநிலை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் சற்று குறைந்து (1-2 டிகிரி செல்சியஸ்) இயல்பை ஒட்டியும், இயல்பை விட சற்று அதிகமாகவும் இருக்கக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 40 முதல் 41 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 30-31 டிகிரிசெல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தமிழக கடலோரப்பகுதிகள்:இன்று, குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

நாளை முதல் மே 31 வரையில், குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். ஜூன் 1 ஆம் தேதிகளில் எச்சரிக்கை ஏதுமில்லை என்று கூறப்படுகிறது.

வங்கக்கடல் பகுதிகள்:இன்று, வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகள், தெற்கு மற்றும் மத்திய வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

நாளை வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகள், மத்தியகிழக்கு வங்கக்கடல், வடக்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மே 30 ஆம் தேதி, தென்மேற்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகள், வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளின் வடக்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். தெற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மே 31 ஆம் தேதியில், தென்மேற்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

ஜூன் 1 ஆம் தேதி, தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அரபிக்கடல் பகுதிகள்:இன்று, தெற்குகேரளா, லட்சத்தீவு- மாலத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். நாளை, மாலத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு- மத்திய அரபிக் கடல், லட்சத்தீவு, தெற்குகேரளா கடலோரப்பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மே 30 -ல் தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக் கடல், லட்சத்தீவு- மாலத்தீவு பகுதிகள், தெற்குகேரளா கடலோரப்பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மே 31 ஆம் தேதி தெற்குகேரளா கடலோரப்பகுதிகள், லட்சத்தீவு – மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். ஜூன் 1 ஆம் தேதி, எச்சரிக்கை ஏதுமில்லை. மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இதையும் படிங்க:வெயிலும் உண்டு.. மழையும் உண்டு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! - Tamil Nadu Weather Update

ABOUT THE AUTHOR

...view details