தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டின் உள்மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு! - TN Weather report - TN WEATHER REPORT

TN Weather report: தமிழ்நாட்டின் உள்மாவட்டங்களில் இயல்பை விட மிக அதிகமான வெப்பம் பதிவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

weather report
வானிலை ஆய்வு மையம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 9, 2024, 3:31 PM IST

சென்னை:கடந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. ஏனைய தமிழ்நாட்டின் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

பதிவான மழை அளவு (செ.மீ): சிற்றாறு-I (கன்னியாகுமரி) தலா 1 செ.மீ மழையும் பெய்துள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை: தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களின், சமவெளி பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் பொதுவாக இயல்பை விட 2 - 5 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது. வட தமிழக உள் மாவட்டங்களான சேலம், ஈரோடு, திருப்பத்தூர், மதுரை நகரம், கரூர் பரமத்தி, தர்மபுரி, திருச்சி, திருத்தணி, பாளையங்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இயல்பை விட மிக அதிகமாக இருந்தது.

தமிழக உள் மாவட்டங்களில் கரூர் பரமத்தி, தருமபுரி மற்றும் மதுரை (நகரம்) ஆகிய இடங்களில் வெப்ப அலை வீசியது. தமிழக உள் மாவட்டங்களில் எட்டு இடங்களில் அதிக பட்ச வெப்பநிலை 40– 42 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. அதிக பட்ச வெப்பநிலை சேலத்தில் 41.7 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

அதேபோல், ஈரோட்டில் 41.6 டிகிரி செல்சியஸ், திருப்பத்தூரில் 41.4 டிகிரி செல்சியஸ், மதுரை நகரத்தில் 41.2 டிகிரி செல்சியஸ், கரூர் பரமத்தியில் 41.0 டிகிரி செல்சியஸ், தருமபுரி மற்றும் திருச்சியில் 40.7 டிகிரி செல்சியஸ் மற்றும் நாமக்கல்லில் 40.0 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

மேலும், மதுரை விமான நிலையம், திருத்தணி, வேலூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய இடங்களில் 39 டிகிரி செல்சியஸ் முதல் 40 டிகிடி செல்சியஸ் வரை பதிவாகியுள்ளது. தமிழக கடலோரப்பகுதிகளில் 34 – 37 டிகிரி செல்சியஸ், புதுவையில் 35.6 டிகிரி செல்சியஸ், காரைக்கால் பகுதியில் 34.6 டிகிரி செல்சியஸ் மற்றும் மலைப்பகுதிகளில் 23 – 30 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

சென்னை மீனம்பாக்கத்தில் 37.5 டிகிரி செல்சியஸ் (இயல்பை விட 2.2 டிகிரி செல்சியஸ் அதிகம்) மற்றும் நுங்கம்பாக்கத்தில் 35.3 டிகிரி செல்சியஸ் (இயல்பை விட 1.0 டிகிரி செல்சியஸ் அதிகம்) பதிவாகியுள்ளது.

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை:தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது.

  • 09.04.2024 மற்றும் 10.04.2024: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
  • 11.04.2024: கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
  • 12.04.2024 மற்றும் 13.04.2023: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
  • 14.04.2024 மற்றும் 15.04.2023: தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:

  • 09.04.2024 முதல் 13.04.2024 வரை: அடுத்த ஐந்து தினங்களில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும்.
  • 09.04.2024: அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் 2-4 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். இதர தமிழக பகுதிகளில் ஒருசில இடங்களில் 2-3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் 38-41 டிகிரி செல்சியஸ் மற்றும் கடலோரப்பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் 34-38 டிகிரி செல்சியஸ் இருக்கக்கூடும்.
  • 10.04.2024 மற்றும் 11.04.2024: அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக தமிழகத்தில் 2 – 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

ஈரப்பதம்:

09.04.2024 முதல் 11.04.2024 வரை:அடுத்த மூன்று தினங்களுக்கு காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30-50 சதவிகிதம் மற்ற நேரங்களில் 40-70 சதவிகிதம் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-80 சதவிகிதமாகவும் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுவும் அறிவிக்கப்படவில்லை.

இதையும் படிங்க:நடுக்கடலில் தமிழக மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்படையினர்.. 2 மீனவர்கள் மருத்துமனையில் அனுமதி! - Rameshwaram Fishermen Attacked

ABOUT THE AUTHOR

...view details