சென்னை:தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களிலும், கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிக லேசான மழை பதிவாகியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
மாவட்டம் | மழை அளவு (சென்டிமீட்டரில்) |
ஆழியார் (கோயம்புத்தூர்) | 15 சென்டிமீட்டர் |
திருமூர்த்தி அணை (திருப்பூர்), திருமூர்த்தி IB (திருப்பூர்) | 14 சென்டிமீட்டர் |
அமராவதி அணை (திருப்பூர்) | 12 சென்டிமீட்டர் |
கொட்டாரம் (கன்னியாகுமரி) | 9 சென்டிமீட்டர் |
பொதுப்பணித்துறை மக்கினம்பட்டி (கோயம்புத்தூர்), PWD வாரப்பட்டி (கோயம்புத்தூர்) | 8 சென்டிமீட்டர் |
குளச்சல் (கன்னியாகுமரி), மடத்துக்குளம் (திருப்பூர்), RSCL-3 செம்மேடு (விழுப்புரம்), திருப்பத்தூர் (சிவகங்கை), கன்னியாகுமரி (கன்னியாகுமரி) | 7 சென்டிமீட்டர் |
சந்தியூர் KVK AWS (சேலம்), குருந்தன்கோடு (கன்னியாகுமரி), தர்மபுரி (தர்மபுரி), மைலாடி (கன்னியாகுமரி), சேத்துப்பட்டு (திருவண்ணாமலை), தர்மபுரி PTO (தர்மபுரி), கோயம்புத்தூர்-தெற்கு (கோயம்புத்தூர்) | 6 சென்டிமீட்டர் |
இரணியல் (கன்னியாகுமரி), குழித்துறை (கன்னியாகுமரி), பென்னாகரம் (தர்மபுரி), பொள்ளாச்சி (கோயம்புத்தூர்), கோவில்பட்டி (திருச்சிராப்பள்ளி), திருமயம் (புதுக்கோட்டை), பழனி (திண்டுக்கல்), கோழிப்போர்விளை (கன்னியாகுமரி), நாகர்கோயில் (கன்னியாகுமரி) | 5 சென்டிமீட்டர் |
தக்கலை (கன்னியாகுமரி), மணப்பாறை (திருச்சிராப்பள்ளி), முள்ளங்கினாவிளை (கன்னியாகுமரி), கரூர் (கரூர்), உடுமலைப்பேட்டை (திருப்பூர்), கோயம்புத்தூர் விமான நிலையம் (கோயம்புத்தூர்), ஏற்காடு (சேலம்), ஓசூர் (கிருஷ்ணகிரி), ஒகேனக்கல் (தர்மபுரி), நாலுமுக்கு (திருநெல்வேலி), களியல் (கன்னியாகுமரி), அடையாமடை (கன்னியாகுமரி) | 4 சென்டிமீட்டர் |
அதிகபட்ச வெப்பநிலை:அதிகபட்ச வெப்பநிலை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக இயல்பை விட குறைவாக இருந்தது. அதிகபட்ச வெப்பநிலை திருத்தணியில் 36.1 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 32 டிகிரி முதல் 36 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.
தமிழக கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 30 டிகிரி முதல் 33 டிகிரி செல்சியஸ் மற்றும் மலைப் பகுதிகளில் 19 டிகிரி முதல் 26 டிகிரிசெல்சியஸ் பதிவாகியுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை சென்னை மீனம்பாக்கத்தில் 35.8 டிகிரி செல்சியஸ் (-3.3 டிகிரி செல்சியஸ்) மற்றும் நுங்கம்பாக்கத்தில் 35.3 டிகிரி செல்சியஸ் (-2.9 டிகிரி செல்சியஸ்) பதிவாகியுள்ளது.
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை:வடதமிழக - தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று காலை 5:30 மணி அளவில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது வடகிழக்கு திசையில் நகர்ந்து, 24ஆம் தேதி காலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும்.
அதன் பிறகு, இது மேலும் வலுப்பெற்று வடகிழக்கு திசையில் நகர்ந்து, வடகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 25 ஆம் தேதி மாலை நிலவக்கூடும். தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.