தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'டிஜிட்டல் பொருளாதாரத்தால் இந்தியா பொருளாதாரம் முன்னேற்றம்' - கிருஷ்ணன் ஐஏஎஸ் பேச்சு - பொருளாதார முன்னேற்றம்

Meity Secretary Krishnan: டிஜிட்டல் பொருளாதாரத்தால் நமது நாடு 20% கூடுதலாக பொருளாதார முன்னேற்றம் அடைந்துள்ளது என மத்திய அரசின் மின்னணு தகவல் தொழில்நுட்ப துறையின் செயலாளர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Meity Secretary Krishnan IAS
டிஜிட்டல் பொருளாதாரத்தால் இந்தியா பொருளாதார முன்னேற்றம் அடைந்துள்ளதாக தகவல் தொழில்நுட்ப துறையின் செயலாளர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 24, 2024, 7:45 AM IST

மத்திய மின்னணு தகவல் தொழில்நுட்ப துறை செயலாளர் கிருஷ்ணன் ஐஏஎஸ்

வேலூர்:டிஜிட்டல் பொருளாதாரத்தால் நமது நாடு 20 சதவிகிதம் கூடுதலாக பொருளாதார முன்னேற்றம் அடைந்துள்ளது என மத்திய அரசின் மின்னணு தகவல் தொழில்நுட்ப துறையின் செயலாளர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் வளர்ந்து வரும் பொறியியல் மின்னணு தகவல் தொழில் நுட்பங்கள் குறித்த கருத்தரங்கம் நேற்று (பிப்.23) நடைபெற்றது. இதில் மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் கிருஷ்ணன் கலந்துகொண்டு பல்வேறு தகவல் தொழில் நுட்பங்கள் சம்பந்தமான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

பின்னர் விழாவில் பேசிய மத்திய மின்னணு தகவல் தொழில்நுட்ப துறையின் செயலாளர் கிருஷ்ணன், "டிஜிட்டல் தொழில்நுட்ப பரிமாற்றம் எனப்படும் டிஜிட்டல் பொருளாதாரத்தால் நமது நாட்டிற்கு நல்ல நன்மை ஏற்பட்டு, நாடு 20 சதவிகிதம் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்துள்ளது. 19ஆம் நூற்றாண்டு தொழில் புரட்சி என்றால், தற்போது தகவல் தொழில்நுட்ப புரட்சி நடக்கிறது.

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்தை வளர்ப்பதில் மிகவும் கவனம் செலுத்துகிறது. இதனால், பல நல்ல முன்னேற்றங்களும் ஏற்பட்டு வருகின்றன. நாட்டில் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியின் வளர்ச்சி வேகத்தைப் பார்த்தால், பிற துறைகளின் வளர்ச்சியின் வேகத்தைப் போலவே அதிகரித்து வருகிறது.

மாணவர்கள் புதிய கண்டுபிடிப்புகளில் ஈடுபட வேண்டும். அது இந்த சமுதாயத்திற்கு மிகவும் பயனுள்ளதாக அமைய வேண்டும். இருப்பினும், ஆர்ட்டிபிஷியல் இண்டலிஜெண்ட் (Artificial Intelligence) எனப்படும், தகவல் தொழில்நுட்பத்தில் பயன்படுத்தும் செயற்கை நுண்ணறிவால் பல சமூக ஆபத்துகளும் உள்ளது.

இனிவரும் காலங்களில் தகவல் மின்னணு தொழில்நுட்பத்தில் பல கண்டுபிடிப்புகள் வந்தாலும், மக்களுக்கும் சமூகத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் இருக்க வேண்டும்" எனக் கூறினார். இவ்விழாவில் ஏராளமான மாணவ, மாணவிகளும் பங்கேற்றனர்.

இதையும் படிங்க:ஆழ்கடலை ஆராயப்போகும் சமுத்ரயான்: சந்திரயான் , ககன்யான் வரிசையில் அடுத்த முயற்சி

ABOUT THE AUTHOR

...view details