தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“கேரள இளைஞர்களுக்குச் செல்லும் வேலைவாய்ப்பு” - ரயில்வேக்கு வைகோ முக்கிய வலியுறுத்தல்! - VAIKO

தமிழக இளைஞர்களின் வேலை வாய்ப்பை பறிக்கும் வகையில், திருவனந்தபுரம் தேர்வு வாரியத்தோடு மதுரை ரயில்வே கோட்டத்தை இணைப்பதை இந்திய ரயில்வே நிர்வாகம் கைவிட வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 24, 2024, 11:47 AM IST

சென்னை: மதுரைக் கோட்டத்தோடு பொள்ளாச்சி இரயில் நிலையத்தை மீண்டும் இணைக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதுரை இரயில்வே கோட்டத்தை திருவனந்தபுரம் தேர்வு வாரியத்துடன் இணைப்பதன் விளைவாக தமிழர்களின் வேலைவாய்ப்பு கேரள இளைஞர்கள் வசம் செல்ல வாய்ப்புள்ளது என நேற்று முன்தினம் (அக்.22) தனியார் நாளிதழில் கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது.

இது குறித்து ஏற்கனவே பலமுறை இரயில்வே அமைச்சரை நேரில் சந்தித்தும், நாடாளுமன்றக் கூட்டத்திலும் வலியுறுத்தியுள்ளோம். நல்ல முடிவு எடுப்பதாக அப்போது உறுதி அளிக்கப்பட்டது. மேலும், கடந்த ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்ட தென்னக ரயில்வே பொது மேலாளர் உடனான கூட்டத்திலும் இதுகுறித்து விவாதித்துள்ளோம். அப்பொழுதும் நல்ல முடிவினை தெரிவிப்பதாக பொது மேலாளர் கூறினார்.

இதையும் படிங்க:வந்தே பாரத் ஸ்லீப்பர் கோச் தயார்! சிறப்பம்சங்கள் குறித்த பிரத்யேக தகவல்

கடந்த 2003ஆம் ஆண்டு சேலம் கோட்டம் உருவானபோது, மதுரை கோட்டத்தில் இருந்த பொள்ளாச்சி இரயில் நிலையத்தை பாலக்காடு கோட்டத்துடன் இணைத்தனர். இதனைக் கண்டித்து அப்போதே கடுமையான போராட்டங்களை நடத்தி, தடுத்து நிறுத்த ஏற்பாடு செய்தோம். ஆனால், அப்போது இருந்த மத்திய அரசு அதனை ஏற்காமல், பொள்ளாச்சி இரயில் நிலையத்தை பாலக்காடு கோட்டத்தோடு இணைத்தது. எனவே, மதுரை கோட்டத்தோடு பொள்ளாச்சி இரயில் நிலையத்தை இணைப்பதற்காக தொடர்ந்து போராடி வருகிறோம்.

தொடர்ந்து, கரிவலம்வந்தநல்லூரில் மீண்டும் ஒரு இரயில் நிலையம் அமைக்க வேண்டும் என்றும், தென் தமிழகத்தின் கோவில்பட்டி, சாத்தூர், சிவகாசி, விருதுநகர் போன்ற தொழில் மற்றும் வியாபார நகரங்களிலிருந்து பெங்களூரு மற்றும் சென்னை, கோவை உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு நாள்தோறும் காலை வேளையில் இரயில் மற்றும் கூடுதல் இரயில்களை இயக்க வலியுறுத்தி வருகின்றோம்” இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details