தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒரு சீட்டு.. தொகுதி குறித்து வைகோ கூறியது என்ன? - DMK Alliance Seat sharing

DMK Alliance: திமுக - மதிமுக இடையே தொகுதி பங்கீடு இன்று கையெழுத்தானது. வரும் தேர்தலில் ஒரு நாடாளுமன்ற தொகுதியில் மதிமுக தனிச் சின்னத்தில் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

திமுக - மதிமுக தொகுதி பங்கீடு கையெழுத்தானது
திமுக - மதிமுக தொகுதி பங்கீடு கையெழுத்தானது

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 8, 2024, 3:26 PM IST

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற இருப்பதால், அதற்கான பணிகளை அனைத்து கட்சிகளும் தொடங்கி மும்மரமாக நடத்தி வருகிறது. கூட்டணி கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையும் தொடங்கி கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் ஒப்பந்தம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் ,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள், மதிமுக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

இந்த நிலையில், திமுக கூட்டணி மதிமுக இடையே ஒரு தொகுதி உடன்பாடு இறுதி செய்யப்பட்டு இன்று அண்ணா அறிவாலயத்தில் ஒப்பந்தம் கையெழுத்தானது. ஒப்பந்தத்தில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் கையெழுத்திட்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, "திமுக கூட்டணியில் இணைந்து பணியாற்றுவோம். மக்களவைத் தேர்தலில் ஒரு தொகுதி மதிமுகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. எந்த தொகுதி என்பது மற்ற கட்சிகளுடன் பேசி முடிவெடுக்கப்படும். தனி சின்னத்தில் தான் மதிமுக போட்டியிடும். மாநிலங்கவை தேர்தலுக்கு இன்னும் 15 மாதங்கள் உள்ளதால் அது குறித்து தற்போது பேசவில்லை" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:பெண்கள் பெண்ணியம் என்ற பெயரில் தங்கள் திறமைகளை மறந்து விடக்கூடாது - மருத்துவர் சுதா சேஷையன் அறிவுரை!

ABOUT THE AUTHOR

...view details