சென்னை: சென்னை மாநகராட்சியின் நடப்பாண்டிற்கான (2024 - 2025) பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று (பிப்.21) தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. மேலும் இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், ஒட்டுமொத்தமாக 82 புதிய அறிவிப்புகளை மேயர் பிரியா வெளியிட்டார்.
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் NSMT, TURIF, SFC ஆகிய திட்டங்களின் கீழ், 4 ஆயிரத்து 750 கீழான சாலைகள் மற்றும் நடைபாதைகள் மேம்படுத்தும் பணி ரூ.404 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் எனவும், சென்னை பெருநகர மாநகராட்சியின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சேதமடைந்த சாலைகளில் புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.
இதில் சாலை அமைக்கும் COLD MIX INJECTION POT HOLE REPAIRING MACHINE- இயந்திரத்தை ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் சென்னை மாநகராட்சிக்கு கொள்முதல் செய்யப்பட்டு, ஒப்பந்ததாரர் கொண்டு இயக்குதல் மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் பணி எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.