திருசெந்தூர்:அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித்திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலாகத் தொடங்கியது. தொடர்ந்து 12 நாட்கள் இத்திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுகிறது. இதனையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கியுள்ளனர்.
மேலும், பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து அலகு வேல் குத்தியும், காவடி எடுத்தும் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றி வருகின்றனர். இந்த நிலையில் மாசித்திருவிழா தொடங்கியதை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் கல்குறிச்சியை சேர்ந்த பக்தர் காளிதாஸ் என்பவர் பாதயாத்திரையாக வந்து 18 அடி அலகுவேல் குத்தி வேண்டுதலை நிறைவேற்றி சுவாமி தரிசனம் செய்தார்.