தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்க விருப்பமில்லை; கீழ்வெண்மணியில் குண்டு அடிப்பட்ட பழனிவேல் கருத்து..

TN Governor visits Nagapattinam: பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக நாளை(ஜன.28) நாகை செல்லவிருக்கும் தமிழ்நாடு ஆளுநர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினரான பழனிவேலை சந்திக்க விருப்பதாகத் தகவல் வெளியான நிலையில், ஆளுநரின் சந்திப்பில் தனக்கு விருப்பமில்லை என பழனிவேல் தெரிவித்துள்ளார்.

ஆளுநரின் சந்திப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்த CPI(M) உறுப்பினரான பழனிவேல்
ஆளுநரின் சந்திப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்த CPI(M) உறுப்பினரான பழனிவேல்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 27, 2024, 5:32 PM IST

ஆளுநரின் சந்திப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்த CPI(M) உறுப்பினரான பழனிவேல்

நாகப்பட்டினம்: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை(ஜன.28) நாகை மாவட்டத்தில் தமிழ் சேவா சங்கம் சார்பில் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வருகை தர உள்ளார். அதன் ஒரு பகுதியாக 1968 கீழ்வெண்மணி படுகொலையின் போது குண்டு அடிப்பட்டு உயிர் பிழைத்த ஜி.பழனிவேலை சந்திக்க உள்ளார். இந்நிலையில் ஆளுநர் தன்னை வந்து சந்திப்பதில் தனக்கு விருப்பம் இல்லை என பழனிவேல் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் அளித்த பேட்டியில், "வர்க்க போராட்டத்தில் நில சுவான் தாரர்களுக்கு எதிராகப் போராடிய கம்யூனிஸ்ட் தொண்டர்களில் நானும் ஒருவன். அந்த போராட்டத்தின் போது ஆதிக்க சக்திகளால் குண்டடிபட்டு, காயமுற்றுப் பாதிக்கப்பட்டேன். அப்போதெல்லாம் வந்து சந்திக்காதவர்கள், தற்போது வந்து சந்திப்பதற்கான காரணம் என்னவென்று புலப்படவில்லை. எங்களை பிஜபி கட்சிக்கு இழுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஆளுநர் தன்னை சந்திக்கவிருக்கிறார் என்றால் அதுபோன்று ஒருபோதும் நடைபெறாது. அவரின் சந்திப்பை வெறுக்கவில்லை ஆனால், இந்த சந்திப்பில் எனக்கு விருப்பமில்லை" என திட்டவட்டமாக இந்த சந்திப்பிற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை மாவட்டச் செயலாளரும் எம்எல்ஏ-வுமான வி.மாரிமுத்து கூறுகையில், "நாளைய தினம் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கத் தமிழ்நாடு ஆளுநர் நாகை மாவட்டத்திற்கு வருகை தரவிருக்கிறார். இதன் தொடர்ச்சியாக கம்யூனிஸ்ட் கட்சியினர் அதிகமாக இருக்கும் கீழ்வேளூர் பகுதியில் உள்ள கீழ்வெண்மணி கிராமத்தில் வசித்துவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினரான பழனிவேலை சந்திக்க விருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஆளுநரின் சந்திப்பிற்கு பழனிவேல் உடன்பாடு இல்லை என எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் இந்துத்துவா அமைப்புகளுக்கு ஆதரவாக ஆளுநர் ரவி செயல்பட்டு வருகிறார். இதனையடுத்து நாகை மாவட்டத்திற்கு வரும் ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்பு கொடி காட்டுவதுடன் அங்குள்ள வீடுகள், பனைமரங்கள், சாலையோரங்களில் கறுப்புக் கொடிகளைக் கட்டி எங்களின் எதிர்ப்பை தெரிவிக்க உள்ளோம்" என மொழிந்துள்ளார்.

இதையும் படிங்க:'ஆளுநர் பதவியை ஒழிப்போம்' என தேர்தல் வாக்குறுதி - இந்தியா கூட்டணிக்கு திருமாவளவன் கோரிக்கை

ABOUT THE AUTHOR

...view details