கோயம்புத்தூர்:சிட் ஃபண்ட் வணிகத்தின் முன்னோடி நிறுவனமும் 60 லட்சம் சந்தாதாரர்களை கொண்ட மார்கதர்சி சிட் ஃபண்ட் நிறுவனம் 1962-ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. ராமோஜி குழுமத்தின் ஓர் அங்கமான இந்நிறுவனம் தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரப்பிரதேசம் மற்றும் கர்நாடகா மாநிலங்களில் 113 கிளைகளுடன் 60 லட்சம் சந்தாதாரர்களை கொண்டுள்ளது.
மேலும் ஆண்டுக்கு 9,396 கோடி ருபாய் வர்த்தகம் செய்யும் மார்கதர்சி நிறுவனம் சந்தாதாரர்களின் தேவைகளுக்கும், வசதிகளுக்கும் ஏற்ற வகையில் சீட்டு குழுக்களை நடத்தி வருகிறது. மார்கதர்சி சிட் ஃபண்ட் லிமிடெட் நிர்வாக இயக்குநர் ஷைலஜா கிரண் தலைமையில் சிறந்து விளங்கும் இந்நிறுவனம் தனது 114-வது கிளையை கோவையில் இன்று(12.07.2024) துவக்கி உள்ளது.
கோவை மாநகரில் இரண்டாவது கிளையாக துவங்கப்படும் இதில் மாநகர மக்களின் நிதித் தேவைகள் பூர்த்தி செய்யும் வகையில் துவங்கப்பட்டது. கோவை - அவினாசி சாலை ஹோப் காலேஜ் பகுதியில் துவங்கப்பட்ட புதிய கிளையை, மார்கதர்சி சிட் ஃபண்ட் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் சத்திய நாராயண பத்தூரி, துணைத் தலைவர் பாலராம கிருஷ்ணா, தமிழ்நாடு இயக்குநர் ஸ்ரீதர் ஆகியோர் ரிப்பன் வெட்டி, குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தனர்.