கரூர்:தமிழகத்தில் உணவு மற்றும் ஆயில், மருந்து, முட்டை உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மட்டுமல்லாது, தொழிற்சாலை உபகர காரணங்கள், ஆடை போன்ற பொருட்களை விற்பனை செய்வதற்கு அட்டைப்பெட்டியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதற்கென கரூர், ஈரோடு திருப்பூர், நாமக்கல், கோவை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ஆர்டர்கள் அடிப்படையில் அட்டைப்பெட்டிகள் தயாரிக்கும், மும்மரமாக நடைபெற்று வருகிறது.
மூலப்பொருள்களின் விலை உயர்வு:இந்தநிலையில் அட்டைப் பெட்டி தயாரிப்புக்குப் பிரதான மூலப்பொருளான கிராப்ட் காகிதம் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே செல்கிறது. குறிப்பாக கடந்த ஒரு மாதங்களில் மூன்று முறை அறிவிக்கப்படாமல், மூன்று முறை உயர்ந்துள்ளது.
இதனால் சந்தையில், ஏற்கனவே பெறப்பட்ட ஆர்டர்களுக்கு, உரிய விலையில் வழங்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு அட்டைப்பெட்டி உற்பத்தியாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
மேலும் நடப்பு ஆண்டில், பெறக்கூடிய ஆர்டர்களுக்கு ஏற்கனவே வழங்கி வந்த விலைக்கு அட்டைப் பெட்டிகள் வழங்க முடியாத சூழ்நிலை உற்பத்தியாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
உற்பத்தியாளர்கள் ஆலோசனைக் கூட்டம் (Credits - ETV Bharat Tamil Nadu) ஆலோசனை:இதுகுறித்து ஆலோசனை மேற்கொள்வதற்கு தென்னிந்திய அட்டைப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் கோவை பிரிவு தலைவர் சிவக்குமார், செயலாளர் சுரேஷ் ஆகியோர் தலைமையில் செப்டம்பர் 29ஆம் தேதி திருப்பூரில் கூட்டம் நடைபெற்றது. இதில் உற்பத்தி பொருட்களின் விலையேற்றம், மின்சார கட்டண உயர்வு குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.
இதையும் படிங்க:கும்பகோணம் - சீர்காழி நான்கு வழிச்சாலையால் என்ன பயன்? எப்போது பணி தொடங்கும்?
விலை உயர்வு:பின்னர் அக்டோபர் 1ம் தேதி முதல் அட்டைப்பெட்டி விலையில் 15 சதவீத உயர்வு அமல்படுத்தப்பட உள்ளதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து கரூர் தேர்வீதியில் உள்ள தனியார் ஹோட்டலில் தென்னிந்திய அட்டை பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் கோவை பிரிவு கரூர், நாமக்கல் மாவட்ட நிர்வாகிகள் இன்று (திங்கள்கிழமை) ஆலோசனை மேற்கொண்டனர்.
இந்த கூட்டத்தில், கரூர் மாவட்டத்தில், உள்ள ஏற்றுமதி ஜவுளி நிறுவனங்கள் மற்றும் உணவு மற்றும் ஆயில் உள்ளிட்ட உற்பத்தியாளர்கள் 15 சதவீத விலை ஏற்றத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். இக்கூட்டத்தில், தென்னிந்திய அட்டை பற்றி உற்பத்தியாளர்கள் சங்கத்தில் கோவை பிரிவு கரூர் செயற்குழு உறுப்பினர் கார்த்திகேயன் மற்றும் நாமக்கல் செயற்குழு உறுப்பினர் என்.ஜெகன், முன்னாள் மாநில தலைவர் நாமக்கல் திருமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.