தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மன்னம்பந்தல் ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு; கலெக்டர் அலுவலகத்தில் ஊர் மக்கள் காத்திருப்பு போராட்டம்! - mannampandal people protest

மயிலாடுதுறை நகராட்சியுடன் மன்னம்பந்தல் ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராமசபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நகலை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க மக்கள் வந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் இல்லாததால், அலுவலகத்தின் முன்பு அவர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்
போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 3, 2024, 4:24 PM IST

மயிலாடுதுறை:தமிழகத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை அறிவிக்கப்பட்டு செயல்பட்டு வரும் நிலையில், மயிலாடுதுறை நகராட்சி சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நகராட்சி வார்டுகள் விரிவாக்கம் செய்யும் பணிகளை நகராட்சி நிர்வாகம் முன்னெடுத்து மயிலாடுதுறையை ஒட்டியுள்ள மன்னம்பந்தல் மற்றும் ரூரல் ஆகிய இரண்டு ஊராட்சிகளை இணைப்பதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

இதனிடையே காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நேற்று மன்னம்பந்தல் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மயிலாடுதுறை நகராட்சியுடன் தங்கள் கிராமங்களை இணைப்பதற்கு ரூரல் மற்றும் மன்னம்பந்தல் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை நகராட்சியுடன் மன்னம்பந்தலை இணைக்க கூடாது என ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றி, கிராம மக்கள் முன்மொழிந்து கையொப்பமிட்ட தீர்மானத்தின் நகல்களை இன்று மாவட்ட ஆட்சியர் மகாபாரதியிடம் ஒப்படைப்பதற்காக மன்னம்பந்தல் ஊராட்சி மன்ற தலைவர் பிரியா பெரியசாமி, ஒன்றிய குழு உறுப்பினர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் கிராம மக்கள் 500 பேர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர்.

இதையும் படிங்க:“ஒரே நசுக்கு நசுக்கிடுவேன்”.. அதிகாரிகளை மிரட்டும் தொனியில் பேசிய அதிமுக கவுன்சிலரின் தந்தை! - ADMK Member threaten Video

அப்போது மாவட்ட ஆட்சியர் இல்லாததால் கிராம மக்கள் அலுவலக வாசலில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தகவல் அறிந்த வந்த மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் சிவகுமார் தலைமையிலான போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மன்னம்பந்தல் ஊராட்சி மன்ற தலைவர் பிரியா பெரியசாமி, “எங்கள் ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்க வேண்டாம். இங்குள்ள 90 சதவீத மக்கள் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளனர். ஊராட்சியை நகராட்சியுடன் இணைத்தால் நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டம் எங்களுக்கு கிடைக்காது.

ஊராட்சி மன்ற தலைவர் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

அத்திட்டத்தை வைத்து பிழைக்கக்கூடிய மக்கள் எங்கள் பஞ்சாயத்தில் அதிகமாக உள்ளனர். கூரை வீடுகளும் அதிகமாக உள்ளன. இதனால் எங்களுக்கு அரசு வீடு கிடைக்காது. எங்கள் பஞ்சாயத்து நகராட்சியானால் வீடு, தண்ணீர் வரி உயரும். அதனால் எங்கள் ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்க வேண்டாம். மக்கள் நலன் கருதி இதனை கைவிட வேண்டும்” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details