சென்னை:தமிழ்நாடு சட்டப்பேரவை பல்வேறு துறைகள் மீதான மானிய கோரிக்கை குறித்த விவாதம் ஜூன் 20 முதல் தொடங்கி நடைபெற்றது. இக்கூட்டத்தொடரில், தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் விலக்கு, நாடு முழுவதும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தக்கோரி மத்திய அரசை வலியுறுத்தி அரசுத் தீர்மானங்கள் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து, இன்று (சனிக்கிழமை) மதுவிலக்கு அமலாக்க திருத்தச் சட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
சட்டப்பேரவை கூட்டத்தொடரை தொடர்ந்து மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கடந்த அதிமுக ஆட்சியில் பதிவு செய்யப்பட்ட போராட்ட வழக்குகள், கரோனா காலத்தில் தொடுக்கப்பட்ட வழக்குகள், இந்த வழக்குகள் எல்லாம் திமுக அரசு திரும்பப் பெறுவதாக அறிவித்து திரும்பப் பெற்றிருக்கிறது. திரும்ப பெற்ற வழக்குகள் காவல் நிலையத்தில் இருக்கக்கூடிய மின் பொருள்களில் இருந்து நீக்கப்படாததால் பல இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாமல் வேலைக்குச் செல்ல முடியாமல் கடவுச்சீட்டு எடுக்க முடியாத நிலை இருக்கிறது.
இதையும் படிங்க:திருப்பூர்: கள்ளச்சாராயம் குடித்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதி; காவல்துறை விளக்கம் என்ன? - Illicit Liquor Issue in Tirupur