சென்னை:இந்திய தர நிர்ணய அமைவனம் சார்பில் சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் செயற்கை மூட்டுகள், மறுவாழ்வு உபகரணங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று (ஜன.29) 'மானக் மந்தன்’ என்ற பெயரில் நடைபெற்றது.
இந்திய தர நிர்ணய அமைவனம் (பி.ஐ.எஸ்) பொருள்களுக்கான தர உரிமம் (ஐஎஸ்ஐ மார்க்), மேலாண்மை திட்ட சான்றிதழ், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள், கலைப் பொருள்களுக்கான ஹால்மார்க் உரிமம் மற்றும் ஆய்வகச் சேவைகளின் நலன் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பை நோக்கமாகக் கொண்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது.
இந்நிலையில் நடத்தப்பட்ட 'மானக் மந்தன்’ நிகழ்ச்சி குறித்து இந்திய தர நிர்ணய அமைவனத்தின் மூத்த இயக்குநர் மற்றும் தலைவர் பவானி கூறுகையில், “இந்திய தர நிர்ணய அமைவனம் (BIS) மாற்றுத்திறனாளிகளின் இயக்கத்தை மேம்படுத்துவதற்காகச் செயற்கை கால்கள், வீல் சேர், மறுவாழ்வு உபகரணங்கள் உள்ளிட்டவை தரத்திற்கான சான்றிதழ்களை பெற வேண்டும். இந்திய தர நிர்ணய அமைவனம் 143 வகையில் தர நிர்ணயம் செய்துள்ளது.
இதற்கு தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்ளனர். அவர்களிடம் உற்பத்தியாளர்கள் தங்களின் பொருட்களை சமர்பித்து தர சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும். மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு தரமான உபகரணங்களை ஐஎஸ்ஐ முத்திரையுடன் வழங்கும் போது நீண்ட நாட்கள் உழைப்பதுடன், நுகர்வோருக்கு பாதுகாப்பாகவும் இருக்கும்.