சேலம்:சேலத்தைச் சேர்ந்த சபீர், பாலாஜி, கோகுலநாதன் உள்ளிட்டோர் சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்ததாகவும், கடந்த 2016ஆம் ஆண்டு பண மதிப்பிழப்பின்போது இவர்கள் வசம் சுமார் 1 கோடி ரூபாய் வரை இருந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த பணத்தினை தான் மாற்றிக் கொடுப்பதாக தனது பங்குதாரர்களிடம் கூறியுள்ளார்.
ஆனால், பல ஆண்டுகள் ஆகியும் ரூபாய் நோட்டுகளை சபீர் மாற்றிக் கொடுக்கவில்லை. இதனிடையே பாலாஜி என்ற பங்குதாரர் உயிரிழந்து விட்டார். இதனைத் தொடர்ந்து, பல ஆண்டுகள் ஆகியும் பணத்தை திருப்பிக் கொடுக்காதது குறித்து கோகுலநாதன் சபீரிடம் கேட்டுள்ளார். அதற்கு பணம் தன்னிடம் அப்படியே இருப்பதாகவும், இதனை மாற்றுவதற்கு முயற்சி செய்த போது ஒரு லட்சத்திற்கும் மேல் செலவாகி விட்டதாகவும், அந்த பணத்தை கொடுத்துவிட்டு ரூபாய் நோட்டுகளை எடுத்துச் செல்லுமாறு கூறியுள்ளார்.