தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நிலப் பிரச்சனையில் சித்தப்பா மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்திய நபர் - கிருஷ்ணகிரி அருகே பயங்கரம்! - Krishnagiri Petrol burning issue - KRISHNAGIRI PETROL BURNING ISSUE

Krishnagiri Crime: கிருஷ்ணகிரி அடுத்த காவேரிப்பட்டணம் அருகே விவசாய நிலத்திற்கு செல்லும் பாதையை தடுத்ததாக, ஒருவர் தனது சித்தப்பாவின் மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 22, 2024, 7:24 PM IST

சித்தப்பாவை ஒட ஓட விரட்டி பெட்ரோல் ஊற்றி கொளுத்திய நபர்

கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் அடுத்த சவுளுக் கொட்டாய் பிரிவு சாலையில் வடமலை என்பவரது மகன் சின்னவன் மற்றும் அவரது அண்ணன் மணி என்பவரது மகன் செந்தில் ஆகியோர் இருந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் செந்தில் அவரது விவசாய நிலத்தில் உள்ள நெல் கதிரை அறுவடை செய்து கொண்டுவர தனது டிராக்டரில் சென்று உள்ளார். அப்பொழுது சின்னவன் மற்றும் செந்தில் ஆகிய இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு அடிதடி ஏற்பட்டுள்ளது.

இது குறித்து இருதரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதனால், ஆத்திரமடைந்த செந்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தனது சித்தப்பா அவரது தீவனக்கடையில் இருந்த பொழுது, கடைக்குச் சென்றுள்ளார். அப்போது செந்தில், தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை அவரின் மீது ஊற்றி நெருப்பைப் பற்றவைத்துள்ளார். இதில் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்த சின்னவன் ஓடி தப்பிக்க முயன்றள்ளார். அப்போது, அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தினர்.

மேலும் இந்த நிலப் பிரச்னை காரணமாக, சித்தப்பாவின் மீது பெட்ரோல் ஊற்றி எரித்த செந்தில் தப்பி ஓடி தலைமாறிவாகியுள்ள நிலையில் அவரை காவேரிப்பட்டணம் போலீசார் வலைவீசி தேடிவந்த நிலையில் அவரை கைது செய்தனர்.

விவசாய நிலத்திற்கு செல்ல சித்தப்பா எதிர்ப்பு தெரிவித்து நிலையில், அவரின் மீது பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்நிலையில், தற்போது இது குறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

இதையும் படிங்க:ரூ.150 இருந்தால் கொடைக்கானலை ஜாலியாக சுற்றிப்பார்க்கலாம்.. நீங்கள் செய்ய வேண்டியது என்ன? - Kodaikanal Tourism

ABOUT THE AUTHOR

...view details