திருப்பத்தூர்: பெருமாபட்டு பகுதியைச் சேர்ந்த குணசேகரன் மகன் ராஜேஷ்குமார்(30). இவர் நேற்று சமூக வலைத்தளங்களில் சாரை பாம்பை தோல் உரிப்பது போல் வீடியோ ஒன்றைப் பதிவு செய்துள்ளார். இதனை ஆதாரமாகக் கொண்டு திருப்பத்தூர் மாவட்ட கோட்ட வன அலுவலர் மகேந்திரன் உத்தரவின் படி திருப்பத்தூர் வனச்சரக அலுவலர் சோழராஜன் தலைமையில் வனவர் மற்றும் வனப் பணியாளர்கள் இந்த வீடியோ வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது வீடியோவில் இருந்தவர் பெருமாபட்டு கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து ராஜ்குமாரை வனப் பணியாளர்கள் கைது செய்தனர். மேலும் விசாரணையில் ராஜ்குமார், சாரை பாம்பைத் தோல் உரித்து அதனைச் சமைத்து கறியாக்கிச் சாப்பிட்டதும் தெரிய வந்தது.