சென்னை:போரூர், ஆற்காடு சாலையை சேர்ந்தவர் அலெக்சாண்டர்(41). இவர் அதே பகுதியில் புதிய இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யும் ஷோரூமில் மானேஜராக பணிபுரிந்து வருகிறார். கடந்த தினங்களுக்கு முன்பு ஷோரூமிற்கு வந்த நபர் ஒருவர் தனது மகளின் பிறந்த நாளுக்கு பரிசாக புதிய இருசக்கர வாகனம் கொடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
ஆனால், புதிய வாகனங்களுக்கான முன்பதிவு திட்டம் முடிவடைந்ததாக கூறப்பட்ட நிலையில், வீட்டிற்கு தங்களது ஊழியரை அனுப்பினால் வேண்டிய ஆவணங்கள் மற்றும் இதற்கான தொகையை தருவதாக அந்நபர் தெரிவித்துள்ளார். பின்னர், அந்நபரிடம் புதியதாக இருசக்கர வாகனம் ஒன்றையும், தங்களது ஊழியர் ஒருவரையும் அந்நபருடன் அனுப்பியுள்ளனர்.
இதைதொடர்ந்து வளசரவாக்கம் பகுதிக்கு சென்றவுடன் வீடு வந்துவிட்டதாகவும், கீழே இறங்குமாறு கூறியுள்ளார். இதை நம்பிய ஊழியர் கீழே இறங்கியதும், அங்கிருந்த புதிய இருசக்கர வாகனத்தோடு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதையறிந்தது அதிர்ச்சியடைந்த ஊழியர், செய்வதறியாமல் வளசரவாக்கம் காவல்நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார்.