சென்னை: சென்னையில் இருந்து மலேசியா தலைநகர் கோலாலம்பூர் செல்லும் மலேசியா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று நள்ளிரவு 12:30 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து கோலாலம்பூர் புறப்பட தயாரானது. விமானத்தில் 168 பயணிகள், 12 விமான ஊழியர்கள் மொத்தம் 180 பேர் இருந்தனர். விமானம் ஓடுபாதையில் ஓடத் தொடங்குவதற்கு முன்னதாக விமானத்தின் இயந்திரங்களை விமானி சரிபார்த்த போது விமானத்தில் இயந்திர கோளாறு இருப்பதை கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நிலையில் விமானத்தை இயக்கினால் ஆபத்து என்பது உணர்ந்த விமானி, உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு அவசரமாக தகவல் தெரிவித்ததை அடுத்து, விமானத்தின் கதவுகள் திறக்கப்பட்டு விமான பொறியாளர்கள் குழுவினர் விமானத்துக்குள் ஏறி இந்திரங்களை சீர் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் நீண்ட நேரம் ஆகியும், விமானத்தின் இயந்திரங்களை சரி செய்ய முடியவில்லை. இதனால் விமானம் தாமதமாக புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க:ஏ.சி.பி இளங்கோவனுக்கு எதிரான மனித உரிமைகள் ஆணையத்தின் உத்தரவுக்கு தடை!