ஈரோடு:திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியின் 92வது பிறந்த நாளையொட்டி ஈரோடு மாவட்ட ஆசனூர் மலைப்பகுதியில் திராவிடர் கழக மாவட்ட தலைவர் சென்னியப்பன் தலைமையில் பொது மருத்துவ முகாம் நேற்று வியாழக்கிழமை (நவம்பர் 21) நடைபெற்றது.
இந்த முகாமினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துச்சாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதைத் தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர், "கடந்த 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த 'மக்களை தேடி மருத்துவம்' திட்டம், இதுவரை 2 கோடி மக்களை சென்றடைந்துள்ளது. இந்தத் திட்டத்தின் சேவையை பாராட்டி ஐநா சபை நமக்கு விருது வழங்கியுள்ளது.
சாதனைத் திட்டம்
உலகளவில் மக்கள் இருக்கும் இடம் தேடி மருத்துவம் அளிக்கும் இந்த திட்டத்தின் மக்கத்துவததை அறிந்து, ஐநா தனது உச்சப்பட்ச விருதான 'ஐநா விருது' வழங்கியுள்ளது. இந்த திட்டத்தின் வாயிலாக 12,317 பேர் 'லோடிங் டோஸ்' மாத்திரைகளால் மாரடைப்பில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து விழுப்புரத்தில் நவம்பர் 29ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் மேலும் 2 கோடி மக்களுக்கு பயனளிக்கும் வகையில் மருந்து பெட்டகம் வழங்கப்பட உள்ளது.
இதையும் படிங்க:“ம்ம்.. சாப்பிட்டேன்.. தண்ணீ குடிச்சுட்டேன்.. தலையை அசைத்து மருத்துவருக்கு பதிலளித்த திருச்செந்தூர் தெய்வானை யானை!