சென்னை:திமுக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுடனும் முதற்கட்ட பேச்சுவார்த்தையை நிறைவு செய்துள்ளது. இந்நிலையில் திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இணைய உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகி வந்தது. இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் இணைவதில் புதிய தகவல் ஒன்று இன்று (பிப்.18) வெளியாகியுள்ளது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் இடங்களில் இருந்து ஒரு தொகுதியை மக்கள் நீதி மய்யத்திற்கு பிரித்துக் கொடுக்கத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதன்படி, கோவை நாடாளுமன்றத் தொகுதியை மக்கள் நீதி மய்யத்திற்கு வழங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. மக்கள் நீதி மய்யம் கட்சியின் 7ஆம் ஆண்டு துவக்க விழா வரும் 21ஆம் தேதி ஆழ்வார்பேட்டை கட்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது.