தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வைகை ஆற்றுக்குள் சிக்கிய அரிய வகை பறவை.. சாதுர்யமாக காப்பாற்றிய இளைஞருக்கு பாராட்டு! - MADURAI

வைகை ஆற்றில் நெகிழி சாக்கு ஒன்றில் சிக்கித் தவித்த பாம்பு தாரா பறவையை சாதுர்யமாக மீட்ட இளைஞரை பொதுமக்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

பறவையை காப்பாற்றியவர்கள்
பறவையை காப்பாற்றியவர்கள் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 26, 2024, 4:59 PM IST

மதுரை:மதுரை மாநகருக்குள் ஓடும் வைகை ஆற்றில் தற்போது தண்ணீர் நிறைந்து செல்கிறது. இதனால் விதவிதமான பறவைகள் ஆற்றில் உள்ள மீன்களை உண்டு பசியாறி வருகின்றன. இந்நிலையில் 'பாம்பு தாரா' என்ற பறவை மீன் பிடிப்பதற்காக வைகை ஆற்றில் இறங்கிய போது, எதிர்பாராத விதமாக ஆற்றில் மிதந்து வந்த நெகிழி சாக்கு ஒன்றில் அதன் அலகு மாட்டி சிக்கிக்கொண்டது.

இதனால் உயிருக்காக நீண்ட நேரம் போராடிய நிலையில் மயங்கி கிடந்தது. இந்நிலையில் அந்தப் பறவை துடிப்பதைக் கண்ட இளைஞர் விஜயகாந்த் என்பவர் தண்ணீருக்குள் குதித்து நீந்தி சென்று பறவையை உயிருடன் மீட்டார். அதனை தொடர்ந்து பறவையின் அலகில் சிக்கியிருந்த பிளாஸ்டிக் சாக்கை அகற்ற முற்பட்டபோது, பறவையின் பற்கள் பட்ட இளைஞரின் கைகளில் ரத்தம் சொட்டியது.

இதையும் படிங்க:"பெண் குழந்தைகளை நேசிப்பது சமூகத்தை நேசிப்பது போன்றது" - அரசு பள்ளிக்கு நிலத்தை தானமாக வழங்கிய ஆயி பூரணம் அம்மாள் நெகிழ்ச்சி!

இதனால் அருகில் இருந்த மற்றொரு நபருடன் இணைந்து பறவையின் அலகில் சிக்கியிருந்த பிளாஸ்டிக் சாக்கை வெற்றிகரமாக அகற்றினர். தொடர்ந்து பறவை பறக்கவிட்டு தனது மகிழ்ச்சியை அந்த இளைஞர் வெளிப்படுத்தினார். இளைஞரின் இந்த செயலுக்கு பொதுமக்கள் பலரும் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்தனர்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்


ABOUT THE AUTHOR

...view details