தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தவெக மாநாடு: மதுரையில் விஜய் கட்சி சார்பில் கம.. கம..கிடா விருந்து! - Madurai TVK invites - MADURAI TVK INVITES

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு வருகின்ற அக்டோபர் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற உள்ள நிலையில் அக்கட்சியின் மதுரை நிர்வாகிகள் கிடா விருந்து வைத்து பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

தவெக கட்சி சார்பில் வைக்கப்பட்ட கிடா விருந்து
தவெக கட்சி சார்பில் வைக்கப்பட்ட கிடா விருந்து (Credits- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 23, 2024, 10:44 PM IST

மதுரை:தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் வருகிற அக்டோபர் 27ஆம் தேதி நடைபெறும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பை அக்கட்சித் தலைவரரும் நடிகருமான விஜய் அண்மையில் வெளியிட்டார்.

இதனைத் தொடர்ந்து மாநாட்டிற்கான பணிகள் கட்சி சார்பில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கட்சியின் சார்பாக மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சீருடை வழங்குதல், இனிப்பு பண்டங்கள் வழங்குதல் பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்குதல் என பல்வேறு நிகழ்வுகளை ஆங்காங்கே நடத்தி வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக மதுரை கருப்பாயூரணி பகுதியில் உள்ள முனியாண்டி கோவிலில் கிடா வெட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மதுரை வடக்கு மாவட்ட தலைவர் விஜய் அன்பன் கல்லானை தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பொதுமக்கள் அனைவருக்கும் கறி விருந்து படைத்தனர்.

தவெக கட்சி சார்பில் வைக்கப்பட்ட கிடா விருந்து (Credits- ETV Bharat Tamil Nadu)

இதையும் படிங்க:மாற்றுத்திறனாளி பெண்ணின் கோரிக்கையை நிறைவேற்றிய புதுக்கோட்டை தவெக!

அதன் பிறகு தமிழக வெற்றி கழகம் விக்கிரபாண்டியில் நடத்தும் முதல் மாநில மாநாட்டிற்கு வருகை தருமாறு அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தனர். இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உட்பட சிறியவர்கள், பெரியவர்கள், ஆண்கள் பெண்கள் என 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு வருகிற அக்டோபர் 27ஆம் நடைபெறும் பொருட்டு அக்கட்சியின் நிர்வாகிகள் தீவிரமான கட்சி பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கிடா விருந்துகள் நடத்தி பொது மக்களுக்கு அழைப்பு விடுப்போம் என கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details