மதுரை:தெற்கு ரயில்வே சார்பாக நடைபெற்ற 69ஆவது ரயில்வே வார விழாவில் (Southern Railway 69th Week celebration) மதுரை ரயில்வே கோட்டம் பல்வேறு பிரிவுகளின் கீழ் ஆறு விருதுகளை அள்ளிச் சென்றுள்ளது.
தெற்கு ரயில்வே சார்பாக 69ஆவது ரயில்வே வார விழா வியாழக்கிழமை (ஜனவரி 30) அன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பாக செயல்பட்ட அலுவலகங்கள் மற்றும் ஊழியர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டன.
அப்போது, தெற்கு ரயில்வே மண்டல அளவில் சிறப்பாக செயல்பட்டமதுரை கோட்ட பொறியியல் பிரிவு, போக்குவரத்து பிரிவு, சைகை மற்றும் தொலைதொடர்பு பிரிவு, ஊழியர் நலப்பிரிவு, மருத்துவ பிரிவு மற்றும் பண்டகசாலை பிரிவு ஆகியவற்றிற்கு சுழற் கேடயங்கள் வழங்கப்பட்டன.
விருது பெரும் புகைப்படம் (ETV Bharat Tamil Nadu) இந்த கேடயங்களை முறையே முதுநிலை கோட்ட ஒருங்கிணைப்பு பொறியாளர் எம். கார்த்திக், முதுநிலை கோட்ட போக்குவரத்து மேலாளர் வி. பிரசன்னா, முதுநிலை தொலைத்தொடர்பு பொறியாளர் ஆர். ராம் பிரசாத், கோட்ட ஊழியர் நல அதிகாரி டி. சங்கரன், முதன்மை மருத்துவ கண்காணிப்பாளர் எம். பாஸ்கரன், முதுநிலை கோட்ட பண்டக பிரிவு மேலாளர் சைலேஷ்குமார் மௌர்யா ஆகியோர் பெற்றனர். மேலும், இந்த கேடயங்களை தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் வழங்கி பாராட்டினார்.
விருது பெரும் புகைப்படம் (ETV Bharat Tamil Nadu) இதையும் படிங்க:தேசிய பாதுகாப்பு கவுன்சில் விருதைப் பெற்று அசத்திய சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்!
அப்போது, மதுரை கோட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய முதுநிலை கோட்ட தொலைத்தொடர்பு மேலாளர் ஆர். ராம் பிரசாத், வர்த்தக பிரிவு உணவு ஆய்வாளர் ஓ. சதீஷ், ரயில் இன்ஜின் லோகோ பைலட் எஸ்.ஆர். சாஜு, உதவி லோகோ பைலட் ஏ.அய்யா சாமி, ரயில் பாதை பராமரிப்பு பணியாளர் கிரிராஜ் மீனா, திருநெல்வேலி ரயில் பெட்டி பராமரிப்பு பொறியாளர் எம் மந்திரமூர்த்தி, போக்குவரத்து ஆய்வாளர் ஆர். முருகேசன், அலுவலக கண்காணிப்பாளர் ஆர். சுதா ஆகியோருக்கு விஷிஸ்ட் ரயில் சேவா புரஸ்கார் (சிறப்பு ரயில் சேவை விருது) விருதுகள் வழங்கப்பட்டன.