தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

செல்போன் பேசியபடி கார் ஓட்டிய யூடியூபர் டிடிஎஃப் வாசன் மதுரையில் கைது! - TTF Vasan arrest - TTF VASAN ARREST

TTF Vasan arrest: செல்போன் பேசியபடி கார் ஓட்டியதாக பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்துள்ளனர்.

டிடிஎஃப் வாசன்(கோப்புப்படம்)
டிடிஎஃப் வாசன்(கோப்புப்படம்) (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 30, 2024, 10:21 AM IST

மதுரை: சென்னையில் இருந்து மதுரை வழியாக தூத்துக்குடி செல்லும்போது செல்போன் பேசியபடி கார் ஓட்டியதாக யூடியூபர் டிடிஎஃப் வாசன் மீது மதுரை அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரபல யூடியூப்பர் மற்றும் பைக் ரேஸரான டிடிஎஃப் வாசன் ஆபத்தான முறையில் வீலிங் செய்த வழக்கு தொடர்பாக, 10 ஆண்டுகளுக்கு அவரது ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால், அவர் தனது கார் மூலமாக ஊர் சுற்றி அதனை வீடியோவாக பதிவு செய்தும் வருகிறார்.

இந்நிலையில், டிடிஎஃப் வாசனை மதுரை அண்ணாநகர் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். சென்னையில் இருந்து மதுரை வழியாக தூத்துக்குடி செல்லும்போது செல்போன் பேசியபடி கார் ஓட்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த 1ஆம் தேதி இரவு 7.50 மணிக்கு மதுரை வண்டியூர் டோல்கேட் பகுதியில், பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் விதமாகவும், கவனக் குறைவாகவும், உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதமாக TN 40 AD 1101 என்ற காரை, செல்போனில் பேசிக்கொண்டே ஓட்டியதோடு அதனை காரின் டேஸ்போர்டு கேமராவில் பதிவுசெய்து Twin Throttlers என்ற ID ல் யூடியூப் சேனலில் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து, மதுரை மாநகர ஆயுதப்படை சப்-இன்ஸ்பெக்டரும், சமூக ஊடகப்பிரிவு கண்காணிப்பு அலுவலருமான மணிபாரதி அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில், போலீசார் TTF வாசன் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இருஇசக்கர வாகனம் ஓட்டுவதற்கு 10 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அவரை கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:18 வயது நிரம்பாதவர்கள் வாகனம் ஓட்டினால் ஆர்.சி ரத்து.. எப்போது அமல்? - RC Cancel Rules

ABOUT THE AUTHOR

...view details