மதுரை:பெண்ணை கடத்தி பாலியல் கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு தலா மூன்று ஆயுள் தண்டனை மற்றும் 25,000 ரூபாய் அபராதம் விதித்து மதுரை மாவட்ட மகிளா அமர்வு நீதிமன்றம் நேற்று (ஜன.30) உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மேலமடை பகுதியில் ரோட்டில் நடந்து சென்ற பெண் ஒருவரை மேலமடை பகுதியை சேர்ந்த ரவுடிகள் இருவர் மிரட்டி கடத்தி சென்று பாலியல் கொடுமை செய்துள்ளனர். இந்த வழக்கில், மதுரை மேலமடை பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடிகளான விஜய் என்ற குருவி விஜய், கார்த்திக் என்ற மௌலி கார்த்திக் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து மதுரை மாநகர அண்ணா நகர் காவல் நிலைய போலீசார் இருவர் மீதும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது நடவடிக்கையை மேற்கொண்டனர். இதையடுத்து மதுரை மாவட்ட மகிளா அமர்வு நீதிமன்ற உத்தரவின் படி இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.