தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நடிகர் தனுஷ் தங்களது மகன் என உரிமை கோரிய தம்பதியின் மனு தள்ளுபடி - Madras High court

Madras High court: நடிகர் தனுஷை தங்களது மகன் என உரிமை கோரி மேலூரைச் சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதியினர், மேலூர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை ஐகோர்ட் மதுரை கிளை ரத்து செய்தது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 13, 2024, 1:41 PM IST

மதுரை:நடிகர் தனுஷ் தங்களது மகன் என உரிமை கோரி மேலூரைச் சேர்ந்த தம்பதியினர் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளபடி செய்தது. மேலூரைச் சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதியினர், நடிகர் தனுஷ் தங்களது மகன் எனக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கில் தனுஷ் கல்வி மற்றும் பிறப்பு சான்றிதழ்களை போலியாக தாக்கல் செய்துள்ளதால் குற்றவியல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென கதிரேசன், மதுரை ஜேஎம் 6ம் நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார். இந்த மனு தள்ளுபடியானது. இதை எதிர்த்து கதிரேசன், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் சீராய்வு மனு செய்திருந்தார்.

அதில், 'தனுஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பிறப்பு சான்றிதழின் உண்மைத்தன்மையின் முடிவு நீதிமன்றத்திற்கு அனுப்பப்படவில்லை. இதை கவனிக்காமல், தள்ளுபடி செய்த மாஜிஸ்திரேட்டின் உத்தரவை ரத்து செய்து, முறையாக விசாரிக்குமாறு உத்தரவிட வேண்டும்' எனக் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ராமகிருஷ்ணன், 'ஏதோ உள்நோக்கத்துடன் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றச்சாட்டை நிரூபிக்கவில்லை என்பதால், இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது' இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:'சிஏஏ வேண்டாம்' - கோவையில் நேரடியாக போஸ்டர் ஒட்டிய விஜயின் த.வெ.க!

ABOUT THE AUTHOR

...view details