மதுரை:இன்று அதிகாலை கள்ளழகர் ஆற்றில் இறங்கும் இடத்தின் அருகே நடைபெற்ற கொலை முன்பகை காரணமாக நிகழ்ந்தது எனவும், எனவே சித்திரைத் திருவிழாவிற்கும் இந்த கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும் மதுரை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும், இது குறித்து மதுரை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மதுரை மாநகர் மதிச்சியம் காவல்நிலையத்திற்கு உட்பட்ட ஆழ்வார்புரம் பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் கார்த்திக் என்பவரின் மனைவிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த அக்கயர் சாமி மகன் சதீஸ் என்பவருக்கும் திருமணத்துக்கு மீறிய உறவு இருந்து வந்துள்ளது.
இது தொடர்பாக கார்த்திக் மற்றும் சதீஸ் இடையே முன் விரோதம் இருந்து வந்ததுள்ளது. இதனை மனதில் வைத்துக் கொண்டிருந்த சதீஸ், இன்று (ஏப்.23) அதிகாலை 0130 மணியளயவில், ஆழ்வார்புரத்தில் சோனை என்பவருடன் நின்று கொண்டிருந்த கார்த்திக் என்பவரிடம், முன் பகையை மனதில் வைத்து, அவரிடம் வாக்குவாதம் செய்த போது, சதீஸ் மறைத்து வைத்திருந்த கத்தியால் கார்த்திக்கையும், அவருடன் நின்று கொண்டிருந்த சோனையையும் குத்தியதில் இருவருக்கும் காயம் ஏற்பட்டு அரசு இராஜாஜி மருத்துவமனையில் உடனடியாக சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.