தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இலங்கையில் தமிழருக்கு தனி நாடை உருவாக்கி, கச்சத்தீவை மீட்க வேண்டும் - மதுரை ஆதீனம்! - MADURAI ADHEENAM

இலங்கையில் தமிழருக்கு தனி நாடு ஏற்படுத்த வேண்டும் என்றும் கச்சத்தீவை மீட்க வேண்டும் என்றும் மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்.

மதுரை ஆதீனம்
மதுரை ஆதீனம் (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 19, 2025, 11:02 PM IST

மதுரை:இலங்கையில் தமிழருக்கு தனி நாடு ஏற்படுத்த வேண்டும் என்றும் கச்சத்தீவை மீட்க மத்திய அரசுக்கு கோரிக்கை வைப்பேன் எனவும் மதுரை ஆதீனம் கூறியுள்ளார்.

மதுரை பாண்டி கோயில் அருகே உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற மதுரை ஆதீனம் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார்.

அப்போது அவர், திருப்பரங்குன்றம் மலை மீது ஆடுகளை பலியிடுவது குறித்த கேள்விக்கு, '' நமது சமயம் அனைத்து உயிரினங்கள் மீதும் அன்பு காட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தியே அன்பே சிவம் எனக் கூறுகிறது. உயிர் வதை செய்யக்கூடாது. அவ்வாறு செய்வது மகா பாவம் என்றார்.

சிக்கந்தர் மலை

சிக்கந்தர் மலை என இஸ்லாமியர்கள் கூறுகிறார்களே என்ற கேள்விக்கு, '' அறுபடை வீடுகளில் முதல் படை வீடு திருப்பரங்குன்றம். இதனை நமது புராணம் சொல்கிறது. யார் யாரோ சொல்வதை எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது. இஸ்லாமும், கிறிஸ்தவமும் வெளியிலிருந்து வந்த மதங்கள் ஆகும். இங்கு அனைவரும் ஒற்றுமையாக இருந்து தான் வழிபாடு செய்ய வேண்டும். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது என்பது எங்களது வழக்கமாகும். மலை உச்சியில் ஏற்றுவது தவறில்லை. நாங்கள் ஒன்றும் சவூதி அரேபியா சென்று ஏற்றவில்லையே என்றார்.

இதையும் படிங்க:'எம்.ஜி.ஆர், ஜெயலலிதா-வுக்கு நாம் தான் வாரிசு'... சோழிங்கநல்லூர் பொதுக்கூட்டத்தில் இபிஎஸ் பேச்சு!

கச்சத்தீவை மீட்க வேண்டும்

தொடர்ந்து பேசிய அவர், '' இலங்கையில் தமிழர்களை கொன்று விட்டார்கள். அது ராஜீவ் காந்தி அரசுதான், ஆனால், மோடி அரசு அவர்களுக்கு வீடு கட்டி கொடுத்துள்ளது. இலங்கையில் தனிநாடு உருவாக்கித் தர வேண்டும். அதற்காக தான் மோடியை சந்தித்து வருகிறேன். இலங்கை மீனவர்களை கைது செய்யக் காரணம் கச்சத்தீவை நாம் இழந்தது தான். இவை அனைத்திற்கும் காரணம் காங்கிரஸ் அரசுதான். இந்தியாவில் ஒரு இடத்தில் கூட அந்தக் கட்சியை ஜெயிக்க விடக்கூடாது. கச்சத்தீவை மீட்பதற்கு பிரதமரிடம் கோரிக்கை வைத்து வருகிறேன். தமிழர்களுக்கு குரல் கொடுத்தே தீர வேண்டும்'' என்றார்.

ABOUT THE AUTHOR

...view details