தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி; தேவநாதன் யாதவை காவலில் எடுக்கும் போலீஸ்! - Devanathan Yadav case - DEVANATHAN YADAV CASE

Devanathan Yadav financial fraud case: நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதன் யாதவை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க, பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு, சென்னை சிறப்பு நீதிமன்றம் அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது.

தேவநாதன் யாதவ், சென்னை ஐகோர்ட் (கோப்புப்படம்)
தேவநாதன் யாதவ், சென்னை ஐகோர்ட் (கோப்புப்படம்) (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 27, 2024, 8:14 PM IST

சென்னை: மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த 144 முதலீட்டாளர்களிடம் 24 கோடியே 50 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக அந்நிதி நிறுவனத்தின் இயக்குனர் தேவநாதன் யாதவ் உள்பட 3 பேரை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர்.

இந்த மூன்று பேரையும் 10 நாட்கள் தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது.

அந்த மனுவில், வழக்கில் தொடர்புகள் குறித்தும், யார் யாருக்கு நிதி சென்றுள்ளது, எங்கு முதலீடு செய்யபட்டுள்ளது என்பது குறித்து விசாரிக்க வேண்டியுள்ளதால், மூவரையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என தெரிவிக்கபட்டுள்ளது.

இந்த மனு, நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற பொறுப்பு நீதிபதி மலர் வாலன்டினா முன்பு தேவநாதன் உட்பட 3 பேரும் நேரில் ஆஜர்படுத்தபட்டனர்.

இதனையடுத்து நீதிபதி, மூவரையும் 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க, பொருளாதார குற்றப்பிரிவுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார். மேலும், செப்டம்பர் 3ம் தேதி மாலை 4 மணிக்கு மூவரையும் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை தள்ளி வைத்தார்.

இதையும் படிங்க:“பத்த வச்சுட்டியே பரட்ட..” - ரஜினிகாந்தை வைத்து ஸ்டாலின் நாடகம்.. ஜெயக்குமார் குற்றச்சாட்டு!

ABOUT THE AUTHOR

...view details