தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஜாபர் சாதிக்கின் நீதிமன்ற காவல் நீட்டித்து முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு! - JAFFER SADIQ JUDICIAL CUSTODY

JAFFER SADIQ CUSTODY: சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைதான ஜாபர் சாதிக்கின் நீதிமன்ற காவலை ஆகஸ்ட் 23ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜாபர் சாதிக்
ஜாபர் சாதிக் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 12, 2024, 5:28 PM IST

சென்னை: போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தேசிய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு காவல்துறையால் கடந்த மார்ச் மாதம் டெல்லியில் கைது செய்யப்பட்ட தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், தி.மு.க முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக், சட்ட விரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக கூறி அமலாக்கத் துறையும் தனியாக வழக்கு பதிவு செய்து, ஜூன் 26ம் தேதி கைது செய்தது.

ஜாபர் சாதிக்கின் நீதிமன்ற காவல் இன்றுடன்(ஆகஸ்ட் 12) முடிவடைந்ததால் சென்னை புழல் சிறையில் இருந்து காணொலி மூலம் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து ஜாபர் சாதிக்கின் நீதிமன்ற காவலை ஆகஸ்ட் 23ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.

ABOUT THE AUTHOR

...view details