தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆயிரம் கிலோ யானை தந்தங்கள் திருட்டா? - வண்டலூர் உயிரியல் பூங்கா விளக்கம்! - ELEPHANT TUSK STOLEN CASE - ELEPHANT TUSK STOLEN CASE

ELEPHANT TUSK STOLEN CASE: வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஆயிரம் கிலோ யானை தந்தம் திருடு போனதாக வெளியான செய்தி தவறானது என்று உயிரியல் பூங்காவின் இயக்குநர் சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

தந்தங்கள், சென்னை உயர்நீதிமன்றம் கோப்புப்படம்
தந்தங்கள், சென்னை உயர்நீதிமன்றம் கோப்புப்படம் (Credits- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 20, 2024, 8:02 PM IST

சென்னை:சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஆயிரம் கிலோ யானை தந்தம் திருடு போனதாக ஆங்கில நாளிதழில் செய்தி வெளியானது. இது தொடர்பான வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது காணொளி காட்சி மூலமாக ஆஜரான உயிரியல் பூங்கா இயக்குனர் ஆஷிஷ் குமார் ஸ்ரீ வத்சவா பல்வேறு பகுதிகளில் கைப்பற்றப்பட்ட 1830 கிலோ யானை தந்தங்கள் வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள கிடங்கில் பத்திரப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்ததாகவும், ஒரு கிலோ எடையை கொண்ட இரண்டு துண்டுகள் மட்டும் ஒப்பந்த பணியாளரால் திருடப்பட்டதாகவும், பிறகு அதுவும் மீட்கப்பட்டதாகவும், ஆயிரம் கிலோ யானைத் தந்தம் திருடப்பட்டதாக வெளியான செய்தி தவறு எனவும், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க:வ.உ.சி வன உயிரியல் பூங்காவின் கடமான்கள் விடுவிப்பு.. துள்ளி ஓடும் அழகிய காட்சிகள்!

அப்போது பல ஆண்டுகளாக இந்த யானை தந்தங்கள் பாதுகாக்கப்பட்டு வந்திருக்கிறது. அவற்றை அழிப்பதற்கான நடைமுறை என்ன என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு காணொளி காட்சி மூலமாக ஆஜராகி இருந்த தலைமை வன பாதுகாவலர் ஸ்ரீனிவாஸ், யானை தந்தங்களை அழிப்பதற்கு விதிக்கப்பட்ட தடையை மத்திய அரசு விலக்கிவிட்ட காரணத்தினால், குழு அமைத்து இந்த யானைத் தந்தங்கள் அழிக்கப்படும் என்று தெரிவித்தார்.

இதையடுத்து வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள யானைத் தந்தங்களை கணக்கிட்டு, உரிய நடைமுறைகளை பின்பற்றி அழித்து, பின் அது குறித்த அறிக்கையை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை டிசம்பர் 2ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

ABOUT THE AUTHOR

...view details