தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

செந்தில் பாலாஜி குறித்து அவதூறு; அதிமுக நிர்வாகிக்கு விதித்த தடையை நீக்க சென்னை ஐகோர்ட் மறுப்பு! - ctr nirmal kumar - CTR NIRMAL KUMAR

ctr nirmal kumar on Senthil Balaji: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவிக்க, அதிமுக நிர்வாகி சி.டி.ஆர்.நிர்மல் குமாருக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

சென்னை உயர் நீதிமன்றம் -கோப்புப்படம்
சென்னை உயர் நீதிமன்றம் -கோப்புப்படம் (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 10, 2024, 5:48 PM IST

சென்னை:முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்த அவதூறு கருத்துக்களை தெரிவிக்க, அதிமுக நிர்வாகி சி.டி.ஆர்.நிர்மல்குமாருக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

டாஸ்மாக் மதுபான விற்பனை, கொள்முதல் உள்ளிட்டவை தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது குற்றச்சாட்டு கூறி, தற்போது அதிமுக-வில் நிர்வாகியாக உள்ள பாஜக முன்னாள் நிர்வாகி நிர்மல் குமார், ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

இதையடுத்து தனக்கு எதிராக அவதூறு கருத்துக்களை தெரிவிக்க நிர்மல்குமாருக்கு தடை விதிக்கக்கோரி செந்தபாலாஜி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, செந்தில் பாலாஜி குறித்த அவதூறு கருத்துக்களை தெரிவிக்க சி.டி.ஆர்.நிர்மல்குமாருக்கு தடை விதித்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:திருமணத்தை மீறிய உறவை கண்டித்த கணவன்; காதலனுடன் சேர்ந்து தீர்த்துக் கட்டிய மனைவி!

மேலும், நிர்மல்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை உடனடியாக நீக்கவும் உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து நிர்மல்குமார் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீடு வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் ராஜசேகர் அமர்வு, ஆதாரங்களை முழுமையாக ஆய்வு செய்து, 2023ம் ஆண்டு ஏப்ரல் 12ம் தேதி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில் தலையிட எந்த காரணமும் இல்லை எனவும், தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய எந்த ஆதாரங்களும் இல்லை எனவும் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details