சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி நடைபெற்றது. அதற்கு தடை விதிக்கக் கோரியும், தன்னை கட்சியில் இருந்து நீக்கிய தீர்மானத்துக்கு தடை விதிக்கக் கோரியும் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் ஓ.பன்னீர்செல்வம் உட்பட அனைவரும் கட்சியின் முடிவுக்கு கட்டுப்பட்டவர்கள், அதனால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்க்க முடியாது எனக் கூறி அவர் நீக்கப்பட்டதை உறுதி செய்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, எடப்பாடி பழனிசாமி தரப்பில் அதிமுக பொதுச் செயலாளர் என அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, “வழக்கு நிலுவையில் இருக்கும் போது எடப்பாடி பழனிசாமி தன்னை பொதுச் செயலாளர் என எப்படி அழைக்க முடியும்? வழக்கு முடியும் வரை தன்னை அதிமுக முன்னாள் இணை ஒருங்கிணைப்பாளர் என மட்டுமே அழைக்க வேண்டும்” என தெரிவித்தார்.
மேலும், பதிவுத்துறை எப்படி பொதுச் செயலாளர் என அறிக்கையில் வெளியிட்டதை ஏற்றது என கேள்வி எழுப்பி, விசாரணையை ஆகஸ்ட் 7ஆம் தேதி ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க:சசிகலாவை சந்திப்பது உறுதி.. ஓபிஎஸ் கிரீன் சிக்னல்!