தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி ஜாபர் சேட் மீதான அமலாக்கத்துறை வழக்கு ரத்து! - ED Case Quashed - ED CASE QUASHED

Former IPS Office Jaffer Sait: சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரி ஜாபர் சேட் மீது அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 21, 2024, 10:51 PM IST

சென்னை: கடந்த 2006 - 2011ஆம் ஆண்டுகளில் திமுக ஆட்சிக் காலத்தில், சென்னை திருவான்மியூரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வீட்டுமனையை முறைகேடாக பெற்றதாக ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரி ஜாபர் சேட், அவரது மனைவி உள்ளிட்டோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை 2011ஆம் ஆண்டு ஊழல் வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கின் அடிப்படையில், சட்ட விரோத பணப் பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ், ஜாபர் சேட் மீது அமலாக்கத்துறை 2020ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது. பின்னர், இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ஜாபர் சேட் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இதனையடுத்து, ஜாபர் சேட் தரப்பில், தனக்கு எதிரான ஊழல் வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் 2019ஆம் ஆண்டு ரத்து செய்துள்ள நிலையில், அமலாக்கத்துறை வழக்கை தொடர்ந்து நடத்த அனுமதிக்கக் கூடாது எனவும், தனது மனைவிக்கு எதிராக அமலாக்கத்துறை பதிந்த வழக்கு ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், தன் மீதான வழக்கையும் ரத்து செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் வி.சிவஞானம் அமர்வு, ஜாபர் சேட்டுக்கு எதிரான ஊழல் வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளதால், உச்ச நீதிமன்ற உத்தரவின் படி, அமலாக்கதுறை பதிவு செய்த வழக்கை தொடர்ந்து விசாரிக்க முடியாது எனக் கூறி, அவருக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.

இதையும் படிங்க:செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு; சாட்சி விசாரணையைத் தொடங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details