தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராபர்ட் புரூஸ் தேர்தல் வழக்கு; கால அவகாசம் வழங்கி நீதிமன்றம் உத்தரவு! - ROBERT BRUCE ELECTION CASE

நாடாளுமன்றத் தேர்தல் தோல்வியை எதிர்த்து பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் தொடர்ந்த தேர்தல் வழக்கில் ராபர்ட் புரூஸ் பதிலளிக்க மேலும் அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நயினார் நாகேந்திரன், சென்னை உயர்நீதிமன்றம் கோப்புப் படம்
நயினார் நாகேந்திரன், சென்னை உயர்நீதிமன்றம் கோப்புப் படம் (Credits- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 18, 2024, 3:57 PM IST

சென்னை:நடந்து முடிந்த 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் நெல்லையில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மற்றும் திமுக - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் ராபர்ட் புரூஸிடம் போட்டியிட்டு 1 லட்சத்து 65 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

இந்நிலையில், தேர்தல் முடிந்து 45 நாட்களுக்குள் தேர்தல் வழக்கு தொடர வேண்டும் என்ற நீதிமன்ற நடைமுறையின் படி, நயினார் நாகேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அதில், காங்கிரஸ் வேட்பாளர் தேர்தல் ஆணையம் அனுமதித்த தொகையை விட கூடுதலாக தேர்தல் செலவு செய்துள்ளார். நேர்மையான முறையில் அவர் வெற்றி பெறவில்லை என்பதால், அவரது வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:மாணவனை இழுத்துச் சென்ற மெரினா கடல் அலை! கல்லூரி முடிந்து திரும்பியபோது நிகழ்ந்த துயரம்!

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு கடந்த முறை விசாரணைக்கு வந்தது. அப்போது, ராபர்ட் புரூஸ் தரப்பில் பதிலளிக்க 4 வாரங்கள் அவகாசம் வழங்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ராபர்ட் புரூஸ் தரப்பில் பதிலளிக்க மீண்டும் அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

இதை ஏற்க மறுத்த நீதிபதி, ஏற்கனவே போதிய அவகாசம் வழங்கப்பட்டும் ஏன் பதிலளிக்கவில்லை? என கேள்வி எழுப்பினார். மேலும், தொடர்ந்து கால அவகாசம் வழங்க முடியாது என தெரிவித்த நீதிபதி, அடுத்த விசாரணையின் போது பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 15ஆம் தேதி தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details