தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இந்து கோயில்களில் உள்ள சாய் பாபா சிலைகளை அகற்றக் கோரி வழக்கு; அறநிலையத் துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு! - Sai baba idols in Hindu temple - SAI BABA IDOLS IN HINDU TEMPLE

Sai baba idols in Hindu temple: இந்து கோயில்களில் அமைக்கப்பட்டுள்ள சாய் பாபா சிலைகளை அகற்றக்கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம் கோப்புப்படம்
சென்னை உயர் நீதிமன்றம் கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 25, 2024, 7:33 PM IST

சென்னை: இஸ்லாமியராக பிறந்து இஸ்லாத்தையும், இந்து மதத்தையும் போதித்த சாய் பாபாவுக்கு ஷீரடியில் கோயில் அமைந்துள்ளது. தமிழகத்திலும் பல சாய்பாபா கோயில்கள் அமைந்துள்ளன. இந்நிலையில், ஆகம விதிகளுக்கு முரணாக தமிழகத்தில் பல இந்துக் கோயில்களில் சாய்பாபாவின் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த சிலைகளை அகற்ற அறநிலையத் துறைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோவையைச் சேர்ந்த சுரேஷ்பாபு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் எதிர்காலத்தில் சாய் பாபா சிலைகள் அமைக்கப்படாது என்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுத்திருக்கிறார். இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபீக் அமர்வு, இந்து சமய அறநிலையத் துறை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தது.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் மீண்டும் கள் பயன்பாடு? அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றக்கிளை உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details