சென்னை:தமிழ்நாடு முழுவதும் கோயில்களுக்குச் சொந்தமான விவசாய நிலங்களை பாதுகாக்க அரசுக்கு உத்தரவிடக் கோரி சேலத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி குமரேஷ்பாபு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அறநிலையத்துறை தரப்பில், கோயில்களுக்குச் சொந்தமாக 4 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் நிலம் உள்ளதாகவும், அவற்றை பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலங்கள் குறித்த அனைத்து தகவல்களும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், விவசாய நிலங்களை பொறுத்தவரை குத்தகை காலம் முடிந்ததும், அவற்றை மீட்டு மீண்டும் டெண்டர் மூலம் குத்தகைக்கு விடப்படுவதாகவும் அறநிலையத்துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.