தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி உத்தரவு! - MR Vijayabaskar - MR VIJAYABASKAR

MR Vijayabaskar: அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்ததாக பதியப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 24, 2024, 8:16 PM IST

சென்னை:கரூரில் நடைபெற்ற குடிமராமத்துப் பணிகளை தடுத்ததாகவும், அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும் பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, கடந்த 2022ஆம் ஆண்டு முதல் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது நிலுவையில் உள்ள வழக்குகள் என்ன, அதன் தற்போதைய நிலை என்ன என பதிலளிக்கும்படி காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கு மீண்டும் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில், எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது 23 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், அதில் சில வழக்குகள் ரத்து செய்யபட்டுவிட்டதாகவும், சில வழக்குகளின் விசாரணை நிலுவையில் இருப்பதாக தெரிவிக்கபட்டது.

இதையடுத்து நீதிபதி, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும், ஒரு லட்சம் ரூபாய்க்கான பிணைத்தொகை உத்தரவாதத்தைச் செலுத்தவும், விசாரணைக்கு தேவைப்படும் போது நேரில் ஆஜராகவும் உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:ரயிலில் ரூ.4 கோடி சிக்கிய விவகாரம்: போலீசிடம் நயினார் நாகேந்திரனின் உறவினர் அளித்த முக்கிய வாக்குமூலம்! - Rs 4 Crore Cash Seized Issue

ABOUT THE AUTHOR

...view details