சென்னை:அரக்கோணம் தொகுதியில் பாமக வேட்பாளராக போட்டியிட்ட வழக்கறிஞர் பாலு தேர்தல் பிரச்சாரத்தின் போது, ராணிப்பேட்டையில் மலை போல் குவிந்து கிடக்கும், மக்கள் உயிரைக் குடிக்கும் குரோமியக் கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுப்பேன் என தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து தேர்தல் வாக்குப்பதிவு முடிந்தவுடன், கடந்த மே 7ஆம் தேதி ராணிப்பேட்டையில் உள்ள குரோமியக் கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பினார். அதிகாரிகள் தரப்பில் எந்த பதிலும் அளிக்காததால், குரோமியக் கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.