சென்னை: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள பொற்றாமரை குளம் உள்ளிட்ட 44 குளங்கள், 11 வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கடந்த 2018ஆம் ஆண்டில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், அப்துல் குத்தூஸ் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த சமய அறநிலையத்துறை துணை ஆணையர் தாக்கல் செய்த அறிக்கையில், பொற்றாமரை குளத்தைச் சுற்றி உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டது. ஆனால், மனுதாரர் தரப்பில், பொற்றாமறை குளத்தைச் சுற்றி ஆக்கிரமிப்புகள் இருப்பதால் பக்தர்கள் பயன்படுத்த முடிவதில்லை என தெரிவித்தார்.