தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் முறைகேடு வழக்கு; லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க உத்தரவு! - Madras High Court - MADRAS HIGH COURT

Arappor Iyakkam case: தமிழ்நாட்டில் டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ததில் நடந்த முறைகேடு தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரிக்கும்படி லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிடக் கோரிய மனு குறித்து தமிழ்நாடு அரசு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 24, 2024, 10:40 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் 2021 - 2023ஆம் ஆண்டுகளுக்கு இடையில், 45 ஆயிரத்து 800 டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ய 1,182 கோடியே 88 லட்சம் ரூபாய் மதிப்புக்கு டெண்டர் கோரப்பட்டது. இந்த டெண்டர் ஆவணங்களை ஆய்வு செய்ததில், ஒப்பந்ததாரர்கள் லாபமடையச் செய்ததன் மூலம், அரசுக்கு 397 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இது சம்பந்தமாக லஞ்ச ஒழிப்புத் துறையில் அளித்த புகார் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் எனக் கோரி, அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த முறைகேட்டில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, டான்ஜெட்கோ தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ராஜேஷ் லக்கானி உள்ளிட்டோருக்கு எதிராக சந்தேகம் கொள்ள ஆதாரங்கள் உள்ளதால், உயர் நீதிமன்றக் கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக் குழு, இந்த முறைகேடு குறித்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த மனு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி, பதில் மனுத்தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, மனு குறித்து பொதுத்துறை செயலாளர், லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூன் முதல் வாரத்திற்கு ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க:அச்சமாபுரம் கொலை முயற்சி வழக்கு; 6 பேருக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை! - Achamapuram Case

ABOUT THE AUTHOR

...view details