சென்னை: திருவண்ணாமலையில் உள்ள 138 குளங்களில் 32 குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டுமானங்கள் எழுப்பப்பட்டுள்ளதாகவும், இந்த குளங்களை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார்.
இந்த நிலையில், இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபிக் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, குளங்கள் ஆக்கிரமிப்பு குறித்து மாவட்ட ஆட்சியர், பொதுப்பணித் துறையிடம் விவரங்கள் பெற்று அறிக்கை தாக்கல் செய்யப்படும் என அரசு வழக்கறிஞர் எட்வின் பிரபாகர் தெரிவித்தார்.