தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தென்காசி சுயேட்சை வேட்பாளர் தொடர்ந்த வழக்கு; தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு! - Tenkasi Independent Candidate - TENKASI INDEPENDENT CANDIDATE

Candidates List Advertisement Case: தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்களின் பட்டியல், சின்னம் குறித்து விரிவான பத்திரிகை விளம்பரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை நான்கு வாரங்களில் பரிசீலித்து முடிவெடுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 5, 2024, 3:24 PM IST

சென்னை: நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், தூத்துக்குடி தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட பொன் குமரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், தேர்தல் நேர்மையாகவும், நியாயமாகவும் நடத்தப்படவில்லை, வேட்பாளர்கள் சமமாக நடத்தப்படவில்லை என்றும், அரசியல் கட்சிகள் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 38வது பிரிவின்படி, வேட்புமனு திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் முடிவுக்கு வந்த பின், சம்பந்தப்பட்ட தொகுதி தேர்தல் அதிகாரி, தொகுதியில் போட்டியிடும் அத்தனை வேட்பாளர்களின் பெயர், முகவரி, சின்னம் உள்ளிட்ட விவரங்களை பட்டியலிட்டு, விரிவாக பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிட வேண்டும். இந்த விதிமுறையைப் பின்பற்றவில்லை எனக் கூறி, தேர்தல் ஆணையத்துக்கு புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதுமட்டுமல்லாது, வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்த வாக்காளர்களின் பெயர் பட்டியலில் இல்லை எனக் கூறி, அவர்களுக்கான வாக்குரிமையும் மறுக்கப்பட்டுள்ளது என்றும் புகார் தெரிவித்துள்ளார். இதுசம்பந்தமாக அளித்த பல்வேறு புகார்களை ஆய்வு செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனவும், வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும் (ஜூன் 4க்கு முன்பு தொடரப்பட்ட வழக்கு)" எனவும் அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்த மனு, சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபிக் அமர்வு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், வாக்கு எண்ணிக்கை நேற்று முடிவடைந்த நிலையில் இந்த வழக்கு எப்படி செல்லுபடியாகும் எனக் கேள்வி எழுப்பினர்.

இதனை அடுத்து, மனுதாரர் அளித்த புகார் மனுக்களை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரப்பட்டது. இதை ஏற்ற நீதிபதிகள், மனுதாரரின் புகார் மனுக்களை நான்கு வாரங்களில் பரிசீலித்து முடிவெடுக்கும்படி, தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க:சவுக்கு சங்கர் வழக்கு; சிபிசிஐடி மேல்முறையீடு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!சவுக்கு சங்கர் வழக்கு; சிபிசிஐடி மேல்முறையீடு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!

ABOUT THE AUTHOR

...view details