தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சவுக்கு சங்கர் நேர்காணல்; ஊடகவியலாளர் முன்ஜாமீன் மனு - காவல்துறை பதிலளிக்க உத்தரவு! - Journalist Felix Gerald Bail Case - JOURNALIST FELIX GERALD BAIL CASE

YouTuber Felix Gerald petition: சவுக்கு சங்கரின் நேர்காணலை ஒளிபரப்பியதாக பதியப்பட்ட வழக்கில் முன் ஜாமீன் கேட்டு ஊடகவியலாளர் ஃபெலிக்ஸ் ஜெரால்ட் தாக்கல் செய்த மனு குறித்து காவல் துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Madras High Court File Picture
Madras High Court File Picture (Credit to ETv Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 9, 2024, 3:51 PM IST

சென்னை: சவுக்கு சங்கரின் நேர்காணலை ஒளிபரப்பியதாக பதியப்பட்ட வழக்கில் முன் ஜாமீன் கேட்டு ஊடகவியலாளர் ஃபெலிக்ஸ் ஜெரால்ட் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகளையும், பெண் காவலர்களையும் அவதூறாகப் பேசியதாக சவுக்கு சங்கர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சவுக்கு சங்கரின் நேர்காணலை ஒளிபரப்பிய ரெட் பிக் யூடியூப் சேனல் தலைமை நிர்வாகி ஃபெலிக்ஸ் ஜெரால்ட் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் காவல்துறையினர் தன்னை கைது செய்யக்கூடும் என்பதால், முன் ஜாமீன் கேட்டு பெலிக்ஸ் ஜெரால்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி குமரேஷ் பாபு, ஒரு வார காலத்திற்குள் பதிலளிக்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த வாரத்துக்குத் தள்ளி வைத்தார்.

மேலும், விசாரணையின் போது யூடியூப் சேனல்களை கட்டுப்படுத்துவதற்கான தகுந்த நேரமிது என்றும், நேர்காணல் அளிக்க வருபவர்கள் அவதூறான கருத்துக்களைத் தெரிவிக்கத் தூண்டும் நேர்காணல் எடுப்பவர்களை முதல் எதிரியாகச் சேர்க்க வேண்டும் என்றும் நீதிபதி குமரேஷ் பாபு கருத்து தெரிவித்தார்.

இதையும் படிங்க:"சவுக்கு சங்கருக்கு சிறைக்கைதிகளுடன் பகை இருந்திருக்கலாம்" - தமிழ்நாடு அரசு வாதம்! - Savukku Shankar Case

ABOUT THE AUTHOR

...view details