சென்னை:மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியத்தை தங்களுக்கும் வழங்க வேண்டும் என அரசு மருத்துவர்கள், தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை வைத்திருந்தனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க அரசு சார்பில் அமைக்கப்பட்ட குழு, கடந்த 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தனது அறிக்கையை சமர்ப்பித்தது.
இந்நிலையில், ஊதிய உயர்வு வழங்குவது தொடர்பாக கடந்த 2009ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அரசாணை ஒன்று பிறப்பிக்கப்பட்டது. இந்த அரசாணையை அமல்படுத்தக் கோரி, மருத்துவர்கள் சங்கம் சார்பில் அரசுக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த மனுவை பரிசீலிக்கக் கோரி அரசு மருத்துவர் ஜெயக்குமார், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.