தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வடிவேலு தொடர்ந்த மான நஷ்ட ஈடு வழக்கு; சிங்கமுத்து பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவு! - Vadivelu Vs Singamuthu Case - VADIVELU VS SINGAMUTHU CASE

vadivelu case against actor singamuthu: யூடியூப் சேனல்களில் அவதூறாக பேசியதற்காக 5 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு நடிகர் வடிவேலு தாக்கல் செய்த வழக்கில், பதில்மனு தாக்கல் செய்ய நடிகர் சிங்கமுத்துக்கு இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் வடிவேலு மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் கோப்புப் படம்
நடிகர் வடிவேலு மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் கோப்புப் படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 3, 2024, 12:57 PM IST

சென்னை:பல்வேறு யூடியூப் சேனல்களுக்கு நடிகர் சிங்கமுத்து அளித்த பேட்டியில், துளி கூட உண்மையில்லாத பல பொய்களைக் கூறி, தரக்குறைவாக பேசி உள்ளதாக குற்றம் சாட்டி, நடிகர் வடிவேலு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அதில், “பொதுமக்கள் மத்தியில் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக 5 கோடி ரூபாயை மான நஷ்ட ஈடாக வழங்கும்படி சிங்கமுத்துக்கு உத்தரவிட வேண்டும் எனவும், தன்னை பற்றி அவதூறாகப் பேச அவருக்கு தடை விதிக்க வேண்டும்” எனவும் நடிகர் வடிவேலு கோரியிருந்தார்.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, மனுவுக்கு பதிலளிக்கும்படி நடிகர் சிங்கமுத்துவுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று நீதிபதி டீக்காராமன் முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது, நடிகர் சிங்கமுத்து தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'வக்காலத்து தாக்கல் செய்ய உள்ளதால் அவகாசம் வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வக்காலத்து தாக்கல் செய்யவும், பதில்மனுத் தாக்கல் செய்யவும் அவகாசம் வழங்கி, விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தார்.

இதையும் படிங்க:மாணவர்களை தரக்குறைவாக நடத்துவதாக புகார்.. சத்தியமங்கலம் அரசு கல்லூரி கெளரவப் பேராசிரியர் சஸ்பெண்ட்!

ABOUT THE AUTHOR

...view details